உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

41

நெய்யிற் பொரித்த கறியைத் தமிழரெல்லாரும் விரும்பி யுண்டனர். வெள்ளரிப் பிஞ்சைக் குறுக்கேயறுத்ததால் தோன்றும் விதை போன்ற வெளிறிய நறு நெய்யையே அவர் பயன்படுத்தினர்.

அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட காழ்போல் நல்விளர் நறுநெய்”

என்று பூதப்பாண்டியன் தேவி கூறுதல் (புறம்.246) காண்க.

பொரித்த கறியோடு உண்பதற்குப் புலவரிசிச் சோறுபோல் நீண்ட பருக்கைச் சோற்றையே விரும்பினர். நீண்ட பருக்கை கொக்கின் விரல் போலிருந்தலால் "கொக்குகிர் நிமிரல்” எனப்பட்டது.

66

மண்டைய கண்ட மான்வறைக் கருனை கொக்குகிர் நிமிரல் ஒக்கல் ஆர”

(புறம். 398: 24-5)

தமிழகத்தில், முதலில், துறவியரே புலாலுணவை நீக்கி வந்தனர். திருவள்ளுவர்,‘அருளுடைமை' ‘புலான் மறுத்தல்' 'கொல்லாமை' என்னும் மூவதிகாரங்களையும், துறவறவியலில் வைத்திருப்பதும் கண்ணப்ப நாயனார் படையலும் இங்குக் கவனிக்கத் தக்கன. சமணம் தமிழ் நாட்டிற்கு வந்த பின்னரே, இல்லறத்தாரும், சிறப்பாகச் சிவநெறியர், புலாலுணவை நீக்கத் தலைப்பட்டனர். அதனால், மரக்கறியுணவு சைவம் எனப்பட்டது.

மரக்கறி யுணவினராயினும் ஊனுணவினராயினும், பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் என்னும் ஆனைந்தை மிகப் பயன்படுத்தி வந்தனர்.

"நறுநெய்க் கடலை விசைப்ப”

(புறம்.120:14)

கறி பொரிக்கக் காய்ச்சிய நெய்யுலையோசைக்கு மதயானையின் பெருமூச்சையும், கொதிக்கின்ற நெய்யில் துள்ளி வேகும் கறியோசைக்கு ஆழ்ந்த நிறை குளத்தில் பெருமழைத் துளிகள் விழும் ஒசையையும் பண்டைப்புலவர் உவமை கூறியிருப்பது மிக மகிழ்ந்து பாராட்டத்தக்கது.

மையல் யானை அயாவுயிர் தன்ன

நெய்யுலை”(புறம்.261.8-9)

" நெடுநீர் நிறைகயத்துப்

படுமாரித் துளிபோல

நெய்துள்ளிய வறை"

(புறம்.386:13)

யானைக்குக் கொடுக்கும் கவளமும் நெய்யில் மிதித்துத் திரட்டப் பட்டதினால், நெய்ம்மிதி எனப் பெயர் பெற்றது. சமையல் வகைக் கெல்லாம்