உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

அங்ஙனம் இற்றைத் தமிழர் ஒலிப்பதாலும், வட சொல்லென்று தவறாகக் கருதப்படுகின்றது. வடமொழியில் இச்சொல் இல்லை.

66

சரிசமழ்ப்புச் சட்டி சருகு சவடி

சளிசகடு சட்டை சவளி - சவிசரடு

சந்து சதங்கை சழக்காதி ஈரிடத்தும் வந்தனவாற் சம்முதலும் வை,"

என்னும் மயிலைநாதர் எடுத்துக் காட்டுச் செய்யுளால், சவளி என்பது தூய தென்சொல்லாதல் அறியப்படும்.

அக்காலத்து மெல்லாடை, பாம்புச் சட்டை போன்றும், மூங்கிலின் உட்புற மீந்தோல் போன்றும், புகை விரிந்தாற்போன்றும், நீராவி படர்ந்தாற் போன்றும், இழை யோடியது தெரியாமலும், பூத் தொழிலுடன் நுண்ணிதாய் நெய்யப்பட்டிருந்ததென்று பண்டைத் தமிழ் நூல்கள் கூறுகின்றன.

66

நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்து

அரவுரி யன்ன அறுவை”

(பொருநர்.82-88)

56

பாம்புரி யன்னவடிவிள காம்பின்

கழைபடு சொலியின் இழையணி வாரா ஒண்பூங் கலிங்கம்”

காம்புசொலித் தன்ன அறுவை”

66

புகைவிரிந் தன்ன பொங்குதுகில்”

(புறம் 383:9:11)

(சிறுபாண்.236)

CC

66

66

ஆவி யன்ன அவிர் நூற்கலிங்கம்”

கண்ணுழை கல்லா நுண்ணூற் கைவினை வண்ண அறுவையர்"

இழைமருங் கறியா நுழைநூற் கலிங்கம்”

(பெரும்பாண்.469)

(LD60fl. 28:52:3)

(மலைபடு. 561)

66

நீலக் கச்சைப் பூவா ராடை”

66

போதுவிரி பகன்றைப் புதுமல ரன்ன

அகன்றுமடி கலிங்கம்”

(புறம்.274)

(புறம் 393)

(புறம் 390)

"திருமல ரன்ன புதுமடிக் கொளீஇ"

இக்காலக் காஞ்சிபுரப் பட்டுச்சேலை போன்றே, அக்காலப் பட்டாடையும்

முன்றானை யோரத்தில் அழகிய மணி போன்ற நூன் முடிச்சுக்களை யுடையதாயிருந்தது.

"கொட்டைக் கரைய பட்டுடை நல்கி"

(பொருநர்.155)