உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

சட்டை.

அடிபுதையரணம் = அடியை மறைக்கின்ற பாதக் காப்பு. படம்

5.அணி

=

பண்டைத் தமிழகத்தில், சிறந்த வகையில் விரும்பிய அளவு அணிகலம் செய்வதற்கேற்ற பொன், வெள்ளி, முத்து, மணி முதலிய கருவிகளும் தேர்ந்த பொற்கொல்லரும், அணிபவரும், இருந்தனர்.

இக்காலத்தும், உலகில் மிகுதியாய்ப் பொன் கிடைக்குமிடம் ஆத்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவுமாகும். இவை முழுகிப்போன பழந்தமிழகமான குமரிக் கண்டத்தைச் சேர்ந்தவை. ஆதலால் குமரிநாட்டிலும் தமிழர்க்கு ஏராளமாய்ப் பொன் கிடைத்திருக்க வேண்டும்.

குமரிக் கண்டம் முழுகிய பின்பும், கொங்கு நாட்டில் மிகுதியாய்ப் பொன் கிடைத்தது. அது கொங்குப் பொன் எனக் கல்வெட்டிற் சிறப்பாய்க் குறிக்கப்பெற்றுள்ளது. இன்று தங்கச்சுரங்கமுள்ள குவளாலபுரம் (கோலார்) கொங்கு நாட்டைச் சோந்ததே. அந்நாட்டில் தோன்றும் காவிரியாறு, பண்டைநாளிற் பொன் மணலைக் கொழித்த தனால் பொன்னி யெனப் பெற்றது. கொங்கு நாடு பண்டைத் தமிழ கத்தின் ஒரு பகுதியாகும். தில்லையிலிருந்த பொன்னம்பலமும், பண்டைத்தமிழகத்தின் வெள்ளி பொன் வளத்தைக் காட்டும்.

மதுரையிலிருந்த வெள்ளியம்பலமும்

முதற்காலத்தில் ஏராளமாய்ப் பொன் கிடைத்ததனால் பொன் னாலேயே காசடிக்கப்பட்டது. அதனால், காசிற்கு மட்டுமன்றி, தாது (உ லோக) வகை கட்கும் பொன் என்பது பொதுப் பெயராயிற்று. வெண்பொன் = வெள்ளி, செம்பொன் = செம்பு, கரும்பொன் = இரும்பு. பொன் = தாது (metal). இதனால், தமிழகத்தில் இருப்புக் காலத்திற்கு முன் பொற்காலம் ஒன்று இருந்ததோ என ஐயம் எழுகின்றது.

கடைக் கழகக் காலப் புலவர் சிலர்க்கு அளிக்கப்பட்ட பொற் பரிசிலே, அக்காலத்துப் பொன்வளத்தைக் காட்டப் போதுமானது.

காப்பியாற்றுக் காப்பியனார், களங் காய்க் கண்ணிநார் முடிச் சேரல் மீது பதிற்றுப்பத்தின் 4-ஆம் பத்தைப் பாடி, நாற்பது நூறாயிரம் பொன்னும் அவன் ஆண்டத்திற்பாகமும் பெற்றார். பொன் என்பது பொற்காசு.

காக்கைபாடினியார் நச்செள்ளையார், ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் மீது பதிற். 6-ஆம் பத்தைப் பாடி, அணிகலனுக்கென்று ஒன்பது துலாம் பொன்னும் நூறாயிரம் பொற்காசும் பெற்றார்.