உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறமுங் கொடையும்

91

கழியனியம் என்பது. இவற்றுட் பல, ஊரவையாராற் கொடுக் கப்பட்டவையேனும், அரசவொப்பம் பெற்றவை.

வணிகருட் சிறந்த தொண்டு செய்தவனுக்குக் கொடுப்பது எட்டிப்புரவு.

புலவர்க்குக் கொடுப்பது புலவர்முற்றூட்டு.

கலைஞருள், நட்டுவனுக்குக் கொடுப்பது நட்டுவ நிலைக்

காணி; கணியனுக்குக் கொடுப்பது கணிமுற்றூட்டு.

மறையோர்

என்னும் பிராமணருக்குக்

கொடுப்பது

பிரமதாயம் (பிரமதேயம்.) அது தொகுதிப்பட்டவருக்குக் கொடுப் பதும் தனிப்பட்டவர்க்குக் கொடுப்பதும் என இருவகை. அகரப் பற்று, அக்கிரசாலைப்புறம், அக்கிரகாரவாடை என்பன தொகுதிப் பட்டவர்க்குரியன. பார்ப்பனர்மட்டும் குடியிருக்கும் இறையிலி நிலம் அகரப்பற்று. பார்ப்பனர் பெரும்பான்மையாகவும் பிறர் சிறுபான்மையாகவும் குடியிருக்கும் இறையிலிநிலம் அக்கிரகார வாடை, பார்ப்பனரை உண்பிக்கும் அக்கிரசாலைக்கு விடப்பட்ட மானியம் அக்கிரசாலைப் புறம். வேதவிருத்தி, பட்டவிருத்தி, அத்தியயனவிருத்தி (அத்திய யனாங்கம்), தயித்திரியக் கிடைப்புறம், பாரதப்புறம் முதலியன தனிப் பட்டவர்க்குரியன.

சத்திரம், அடிசிற்சாலை (ஊட்டுப்புரை, சோற்றடைப்பு, அன்னசத்திரம்) முதலியவற்றிற்கு விடும் மானியம் சாலைப்புறம் (சாலாபோகம்). அடிசிற்சாலைக்குமட்டும் விடப்படுவது அடிசிற்புறம் தண்ணீர்ப்பந்தலுக்கு விடப்படுவது தண்ணீர்ப்பட்டி. மடத்திற்கு விடப்படுவது மடப்புறம்.

கோயிற்கு விடப்படுவது தேவதானம் அல்லது தேவதானப் பற்று (தேவதாயம், திருநாமத்துக்காணி, திருவிடையாட்டம், திரவிடைப் பற்று.) குடியிருக்கும் மக்களோடு சேர்த்துக் கோயிற் களிக்கப்படும் நிலம் குடி நீங்காத் திருவிடையாட்டம் எனப்படும். பிடாரிகோயிற்கு விடப்படும் மானியம் பிடாரிபட்டி அல்லது பிடாரிவிளாகம் என்றும், சமண பௌத்தப் பள்ளிகட்கு விடப் படுவது பள்ளிச்சந்தம் என்றும் பெயர் பெறும்.

அறம் நோக்கியும் மதம்பற்றியும் விடப்படும் மானிய மெல்லாம் பொதுவாக அறப்புறம் எனப்பெறும்.

பார்ப்பனர்க்கும் கோயிற்கும் ஒரு முழுவூரைத் தானஞ் செய்யும் போது, ஒரு பெண்யானையை அவ் வூரைச் சுற்றிப் போகவிட்டு, அது போனவழியே எல்லையமைத்துக் கல்லுங்