உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மக்கள் நிலைமை

131

அறிவும் அருளுஞ்சான்ற அந்தணரும் தம்மையுந் தம் புதல்வரையும் முறைசெய்யும் அரசரும்,

"வடுவஞ்சி வாய்மொழிந்து

தமவும் பிறவும் ஒப்ப நாடிக்

கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூ உங் குறை

கொடாது

பல்பண்டம் பகர்ந்துவீசும்

991

(பட்டினப்பாலை, 208-211)

வணிகரும், விருந்திருக்க வுண்ணாத வேளாளரும் பல்கி யிருந்தனர்.

அடிப்படையாகக்

பொருளாதாரத்தை காண்டு உழவனையே தலைமைக் குடிவாணனாகப் பண்டைத் தமிழ்நாடு போற்றிவந்தது. மக்களிடை ஒற்றுமையும் அரசனுக்கும் குடிகட்கும் இடையே இருதலையன்பும் இருந்துவந்தன. ‘அரசனாணை' என்ற தொடர் மொழிக்குக் கூட அனைவரும் கட்டுப்பட்டிருந்தனர்.

பிறப்புப்பற்றிய குலப்பிரிவு தமிழ்நாட்டில் ஏற்பபட்டதி லிருந்து, தமிழ்நாட்டு நிலைமாறிவிட்டது, தமிழருக்குள் குலப்பற்று மிகுந்து னவுணர்ச்சி (National feeling) குன்றிப்போயிற்று. தீண்டாமையாலும் அதினிலுங் கொடிய காணாமையாலும் தாக்குண்ட ஒருசார்த் தமிழினம் தன் சீரிய நிலைமையையும், மக்களுரிமையையும் இழந்தது. சுருங்கச் சொல்லின், தமிழினம் முழுதும் பல்வேறுவகையில் சின்ன பின்னப்பட்டுத் தாழ்வடைந்து விட்டது.

அடிக்கடி நிகழ்ந்த போராலும், இடையும் இறுதியும் ஏற்பட்ட அயலார் ஆட்சியாலும், படையேறு குழப்பத்தாலும். கொள்ளையாலும், வெள்ளத்தாலும், பஞ்சத்தாலும், வரிக் கொடுமையாலும், பொதுமக்கள் நிலைமை வரவரச் சீர் கெட்டு வந்தது. வறுமையும் அடிமைத்தனமும் வளர்ந்தோங்கின. தனியடி மையும் கொத்தடிமையும் குலவடிமையுமாகப் பற்பலர் மீளா அடிமைப்பட்டு, அவர் வழியினரும் அந் நிலையராயினர். வெளியார் திரள்திரளாய் வந்து குவிந்ததினாலும், மக்கள் தொகை மிக்கதினா லும், பொருளாதார வீதங் குன்றிற்று. குடிகள் வலசை போனதினால் சில ஊர்கள் குடிப்பாழாயின. அன்பாட்சி நீங்கி அதிகாரவாட்சி ஓங்கியதால், குடிகள் பெரும்பாலும் அஞ்சி வாழ வேண்டியதா யிற்று. மக்களிடையே ஒற்றுமையும் நாட்டுப்பற்றும் அரசப் பற்றும் மறைந்தன.

இங்ஙனம், தமிழாட்சி முடிவுற்ற 17ஆம் நூற்றாண்டுத் தமிழகம், பலவகையிலும் அலைப்புண்டு அல்லற்பட்டிருந்தது.