உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வேத்தியல் எழுத்தும் நூல்களும்

139

(22) ஆற்றுப்படை: கொடையாளியான ஓர் அரசனிடத்தில் பரிசுபெற்ற ஒரு பரிசிலன், தன் போலும் இன்னொரு பரிசிலனை அவனிடம் ஆற்றுப்படுத்துவதாக, அகவலாற் பாடுவது ஆற்றுப்

படை.

இனி,இரவில் நெடுநேரம் விரித்திருக்கும் அரசனைத் துயில் கொள்ளச் சொல்லும் கண்படைநிலையும், வைகறையில் அவனைத் துயிலெழுப்பும் துயிலெடை நிலையும், அறிஞர் அரண்மனை வாயிலில் நின்று தம் வரவை அரசற் கறிவிக்குமாறு கடைகாப்பள ரிடங் கூறும் கடைநிலையும் பரிசிலன் அரசன்முன் நின்று, தான் கருதிய பரிசில் இதுவெனக் கூறும் பரிசிற்றுறையும், அரசன் பரிசில் நீட்டித்தவழிப் பரிசிலன் தன் இடும்பைகூறி வேண்டும் பரிசில் கடாநிலையும், அரசன் பரிசிலன் மகிழப் பரிசளித்து விடைகொடுத் தலைக் கூறும் பரிசில் விடையும், பரிசில் கொடுத்த பின்னும் விடை கொடுக்கத் தாழ்க்கும் அரசனிடத்தினின்று பரிசிலன் தானே செல்ல ஒருப்படுதலைக் கூறும் பரிசினிலையும், அரசன் இறந்த பின் பரிசிலர் கையற்றுப் பாடுங் கையறுநிலையும் முதலிய பல துறைகளைப் பற்றிய செய்யுள்களும்: இயன்மொழி புறநிலை செவியறிவுறூஉ வாயுறை முதலிய பலவகை அரச வாழ்த்துச் செய்யுள்களும் உளவென அறிக.

- முற்றிற்று. -