உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2

பழந்தமிழாட்சி

சோழநாடு பாண்டியநாடு என்னும் பெயர்கள், முறையே சோணாடு பாண்டிநாடு என மருவும். சேரநாடு நெடுமலைத் தொட ருடைமையாலும், குறிஞ்சிநில மிகுதியாலும் மலைநாடெனப்

பட்டது.

தலைச்சங்க காலத்தில் இப்போதுள்ள திருவாங்கூர் கொச்சி குடகு மைசூர் என்னும் சீமைகளும், மலபார் தென்கன்னடம் கோயம்புத்தூர் சேலம் என்னும் மாவட்டங்களும், சேரவேந்தன் ஆள்நிலமாயிருந்தன; திருச்சிராப்பள்ளி தஞ்சாவூர் தென்னார்க்காடு வடார்க்காடு செங்கற்பட்டு சித்தூர் நெல்லூர் கடப்பை அனந்த புரம் என்னும் மாவட்டங்கள், சோழவேந்தன் ஆள்நிலமாயிருந்தன; புதுக்கோட்டை மதுரை இராமநாதபுரம் திருநெல்வேலி என்னும் மாவட்டங்களும், திருவாங்கூர்ச் சீமையின் தென்பகுதியிலிருந்த வேணாடும், தெற்கே இந்துமாவாரியில் (Indian Ocean) அமிழ்ந்து போன பெருநிலப் பகுதியும் பாண்டிய வேந்தன் ஆள்நிலமாயிருந் தன. இப்போதுள்ள சீமை யெல்லைகளும் மாவட்டப் பிரிவினை யும் பெரும்பாலும் ஆங்கில ஆட்சியில் ஏற்பட்டவையாதலின், மேற் கூறிய முத்தமிழ் நாட்டெல்லைகள் மதிப்பாகக் கூறப்பட்டவை என அறிக.

ரு

ஒருவாறு சுருங்கச்சொன்னால் பொதியமலையிலிருந்து வடபெண்ணையாறு நோக்கி வடகிழக்காக இருபது பாகை (degree) சாய்த்து இழுக்கப்படும் கோட்டால் பிரிக்கப்படும் இரு நிலப்பகுதிகளுள், மேலைப்பகுதி முற்றும் சேர நாடாகும்; கீழைப்பகுதியில்,புதுக் கோட்டைக்கு வடக்கிலுள்ளது சோழநாடும், அதற்குத் தெற்கிலுள்ளது பாண்டிநாடும் ஆகும்.

தெற்கில் அமிழ்ந்துபோன குமரியாற்றுக்கும் பஃறுளியாற்றுக் கும் இடைப்பட்ட தொலைவு எழுநூறு காதம் என்று, சிலப்பதி கார விரிவுரையாசிரியராகிய அடியார்க்குநல்லார் கூறியிருப்பதால் பாண்டி நாட்டின் பழம்பரப்பை ஒருவாறு உணரலாம்: காதம் என்பது பத்துக்கல் கொண்டதென்றும்; மூன்று கல் கொண்ட தென்றும் இருவேறாகக் கூறப்படும். அவற்றுள் குறைந்த அளவைக் கொள்ளின், தெற்கே அமிழ்ந்துபோன பாண்டிநாட்டு நிலம் 2100 கல் தொலைவிற்குக் குறையாததாகும். அந்நிலையில், பஃறுளியாறு சாவகத்தீவிற்கு நேர்மேற்கா யமையும்.

"அக்காலத்து அவர்நாட்டுத் தென்பாலிமுகத்திற்கு வட வெல்லையாகிய பஃறுளியென்னும் ஆற்றிற்கும் குமரியென்னு ம் ஆற்றிற்குமிடையே, எழுநூற்றுக் காவதவாறும்; இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரைநாடும், ஏழ்முன்பாலைநாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்குன்றநாடும்,