உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




26

பழந்தமிழாட்சி படைத்தலைவர், யானைமறவர், இவுளிமறவர் (குதிரைச் சேவகர்) என்னும் எட்டுக் கூட்டத்தாரின் பெருந்தொகுதி எண்பேராயமாகும்.

அரசனுடைய நன்மையையும் உடல் நலத்தையும் உண்மை யாகக் கவனித்துப் பேணுதற்கு, உறுதிச்சுற்றம் என்றொரு குழு இருந்தது. குறிக்கப்பட்ட படைத்தலைவர், நிமித்திகர், மருத்துவர், நட்பாளர், அந்தணர் ஆகிய ஐந்திறத்தார் சேர்ந்த குழு, உறுதிச் சுற்றமாகும்.

அரசனில்லாத அல்லது அவன் கடுநோய்ப்பட்ட சமையத்தில் அரசியலைக் கவனித்தற்கு, அரசியற் பொறுப்புச் சுற்றம் ஒன்று இருந்தது. அது ஆசான் (புரோகிதன்), பெருங்கணி (கணியர் தலை வன்), அறக்களத்தந்தணர் (நியாய சபையார்), காவிதி (வரியதிகாரி கள்), மந்திரக் கணக்கர் (அரசவாணையெழுதுவோர்) ஆகிய ஐந்திறத்தாரைக் கொண்டது. கோவலனைக் கொல்வித்த ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனின் இறப்பிற்கும், அவன் மகன் வெற்றி வேற்செழியனின் முடிசூட்டிற்கும். இடைப்பட்ட காலத்தில், பாண்டிப் பெருநாட்டரசியலைக் கவனித்தது அரசியற் பொறுப்புச் சுற்றமே.

தலைநகரிலுள்ள அத்தாணி மண்டபத்தில், அரசன் முன் னிலையில், சூழ்வினையமைச்சரும், படைத்தலைவரும், பல்வேறு ஆள்வினைத் திணைக்களத் தலைவரும், பெருங்கணியும், ஆசானும் பல்வகைப் புலவரும், பிறரும் நாள்தோறும் குழுமியிருக்கும் நிலையான கூட்டத்திற்கு அரசவை என்று பெயர். அது இருக்கு மிடம் அவைக்களம் எனப்படும். அரசவையில் அரசனுக்கடுத்தபடி யாக முதலைமச்சனே தலைமையாயிருப்பான்.

அரசவை, அதிலுள்ளாரின் தன்மையும் அறிவும்பற்றி, நல்லவை தீயவை நிறையவை குறையவை என நால்வகையாக வகுத்துக் கூறப்படும். அறிவு ஒழுக்கம் முதலியவற்றிற் சிறந்து, நடுநிலைமையாகப் பேசுவோர் கூடிய அவை நல்லவை; அதற்கு எதிரானது தீயவை; எல்லாப் பொருள்களையும் அறிந்து எதிர்காலச் செய்திகளை முன்னதாக அறிவிக்கும் பேரறிஞர்கூடிய அவை நிறையவை; அதற்கு எதிரானது குறையவை.

அரசன் அவ்வப்போது திருவாய் மலர்ந்தருளும் ஆணைகளை நேரிற் கேட்பவனுக்குத் திருவாய்க் கேள்வி என்றும், அத்திருவாய்க் கேள்வி அறிவிக்க அறிந்து அரசவாணையை எழுவோர்க்குத் திருமந்திர வோலை என்றும் அவ் வெழுத்தாளர் தலைவனுக்குத் திருமந்திர வோலை நாயகம் என்றும் பெயர். அரசவாணைகளைக்