உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பொருளாதாரம்

65

இஞ்சி எள் வாழை ஆகிய வெள்ளாண்மையில் மாவிற்கு ஐந்து பணமும், வீட்டிற்கு ஆண்டுக்கு இரண்டு பணமும் ஆகும்.

வரியானது அவ்வத் தொழிற்கேற்ப ஆயம், இறை, கடன், கடமை, கறை, காணிக்கை, தீர்வை, பகுதி, பாட்டம், பூட்சி,பேறு, மகமை மகன்மை எனப் பல்வேறு பெயர்பெற்றது. அவற்றுக்கெல் லாம் வரி என்பது பொதுப்பெயராகும். ஊர்த்தலைவன் அல்லது ஊரவையார் விதிக்கும் வரி ஊரிடுவரிப்பாடு எனப்பட்டது.

வாங்கப்பட்ட வரிகள்: அக்காலத்துக் குடிகளிடத்திற் பல வகையிலும் வாங்கப்பட்ட வரிகளாவன: அங்காடிப் பாட்டம் (அங்காடிக்கூலி ), அச்சுவரி, அட்டுக்கிறை, அடிகாசு, அடிமைக் காசு, அணியிடுவான்வரி, அதிகரணத்தண்டம், அதிகாரப்பேறு (அதிகாரப் பொன்), அரிகொழி, அரிநட்டி, அரிவாட்பதக்கு, அருந்தோடு, அரைக்கால்வாசி, அழகெருது, அழகெருது காட்சிக் காசு (காட்சியெருதுகாசு), அழுகற்சரக்கு, அள்ளுக் காசு, அளியிடு வான்வரி, அனுப்பு, ஆசுகவிகள் காசு (ஆசீவக் காசு), ஆசவக்கடமை ஆட்டைச்சம்மாதம் (ஆட்டைக் காணிக்கை), ஆண்டெழுத்துத் தேவை, ஆத்திறைப் பாட்டம், ஆதிரைப் பிள்ளையார் நோன்பு, ஆள்நெல், ஆற்றுக்குலை. ஆற்றுப்பாட்டம், இடைப்பாட்டம், இடைப்பூட்சி, இடைவரி), இராசாசுரங் காணிக்கை, இருபதக் கட்டி, இலாஞ்சினைப் பேறு, இறைகாவல், இறைச்சோறு, இனவரி (இனக்காசு), ஈழப்புன்செய் (ஈழம்பூட்சி), ஈழற்கடிவரி, உகப்பார் பொன் (உகவைப் பொன்), உப்பாயம் (உப்புக்காசு, உப்புகோச் செய்கை), உபயம் (உபய மார்க்கம்), உரல்வரி, உல்லியக்கூலி, உலாவு காட்சி, உவச்சவரி, உழுதான்குடி, உள்வரி, உறுபாதை, உறுவுகோல், நிலன்காசு, ஊசிவாசி, ஊத்தைப் பாட்டம், ஊர்க்கணக்கர் சீவிதம் (ஊர்க்கலனை. ஊர்க்கழஞ்சி) ஊர்ச்சரிகை, ஊராட்சி, ஊரிடுவரிப் பாடு ஊரெட்டு, எட்கடமை (எக்கடமை), எடுத்துக்கொட்டி, எடைவரி, எருமைப்பொன், எழுவை, ஏணிக்காணம், ஏர்க்காடி, (ஏர்ப்பொன், ஏர்க்காணிக்கை), ஏரியாயம், ஏல்வை, ஒட்டிதற் கடமை, ஓட்டச்சு, ஓடக்கூலி, கடையடைக்காய், கடையிறை, கண்காணி, கண்காணி கணக்கர் முதல், கண்கூலி, கண்ணாலக் காணம் (கலியாணக்காணம்). கண்ணிட்டுக்காணம் (கண்ணேட்டுக் காணம்), கணக்கப்பேறு (கணக்கிலக்கை), கதிர்க் காணம், கருவூல வரி, காட்டாள் காசு, காணவட்டம், காணி வெட்டி, காரியவா ராய்ச்சி, காலத்தேவை, காவல் பரப்பு (காவற் பேறு), கீழ்வாரப் பச்சை, குசக்காணம், குடநாழி குடிமை (குடிக்காசு, குடிக்காணம், குடியிறை), குதிரை வரி, குதிரை விலாடம், குமாரக்கச்சாணம், குலை வெட்டி, கூலம், கூற்று நெல், கெடுபாதை, கேள்விமகமை, கைக் கணக்குமுதல்,