உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாவாணர் பொன்மொழிகள்

தி.பி. 1998(1967)

தி.பி. 1999 (1968)

தி.பி. 2000 (1969)

தி.பி. 2002 (1971)

தி.பி. 2003(1972)

"தமிழ் வரலாறு

""

119

“வடமொழி வரலாறு

27

"The Language Problem of Tamilnadu and Its Logical Solution” ஆகிய நூல்கள் வெளியீடு.

மதுரைத் தமிழ் எழுத்தாளர் மன்றம் இவரின் மணிவிழாவைக் கொண்டாடி "மொழிநூல் மூதறிஞர்” எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

06-10-1968-ல் இவரைத் தலைவராகக் கொண்டு “உலகத் தமிழ்க் கழகம்” தோற்றுவிக்கப்பட்டது.

"இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?" வண்ணனை மொழிநூலின் வழுவியல்"

·

"Is Hindi the logical solution of India” - ஆகிய நூல்கள் வெளியீடு.

பறம்புக்குடியில் உலகத் தமிழ்க் கழக முதல் மாநாடு. இம் மாநாட்டில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் முனைவர் சி. இலக்குவனார், முனைவர் வ. சுப. மாணிக்கனார், புலவர் குழந்தை உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர் பங்கேற்றுச் சிறப்பித்தமை குறிப்பிடத் தக்கது.

இம் மாநாட்டில் - "திருக்குறள் தமிழ் மரபுரை

"இசையரங்கு இன்னிசைக் கோவை'

""

""

"தமிழ் கடன்கொண்டு தழைக்குமா?” - ஆகிய நூல்கள் வெளியீடு.

பறம்புமலையில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடைபெற்ற பாரி விழாவில் பாவாணர் "செந்தமிழ் ஞாயிறு” என்று பாராட்டிச் சிறப்பிக்கப் பெற்றார்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களால் தென் மொழியில் அறிவிக்கப்பட்ட ‘செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம்' வகுக்கப் பெற்றது. இத் திட்டத்தைப் பின்னர்த் தமிழக அரசே ஏற்று 1974ஆம் ஆண்டில் தனி இயக்ககமாக உருவாக்கியது.

தஞ்சையில் இவர் தலைமையில் உலகத் தமிழ்க்கழக மாநாடு -"தமிழன் பிறந்தகத் தீர்மானிப்பு மாநாடாக நடந்தது.

“தமிழர் வரலாறு, “தமிழர் மதம்” ஆகிய நூல்கள் வெளியீடு.