உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முன்னுரை

3

முறையுமாக மக்கள் பலதிசைக்கும் பல முறை பரவிப் போயிருக்கின்றனர். மொழியில்லாது பிரிந்துபோனவர் தாம் போன இடங்களில் புதிதாய்த் தத்தமக்கு ஏற்றவாறும் இயன்றவாறும் இயன்மொழிகளை ஆக்கிக்கொண்டனர். மொழி தோன்றியபின் பிரிந்து போனவர் தத்தம் சுற்றுச் சார்பிற்கேற்பப் புதுச் சொற்களை அமைத்தும் தட்பவெப்ப நிலைக்கேற்பப் பழஞ் சொற்களைத் திரித்துங் கொண்டனர். ஆயினும், தொடர்புடைய மக்களெல்லாம் தொடர்புடைய மொழிகளைப் பேசி வருவதும், மக்கள் தொடர்பின் பெருமை சிறுமைக்கேற்ப அவர்கள் மொழிகளின் தொடர்பும் மிக்கும் குறைந்து மிருப்பதும் இயல்பாம். இதற்கு, அமெரிக்க நீகிரோவைப் போல அநாகரிக மொழியராயும் கோவாப் போர்த்துக்கீசியரைப் போலச் சிறுபான்மையராயுமிருந்து, அயன்மொழிகளைக் கடைப்பிடிப்பது விலக்காம். வேறு சில விலக்குகளு முள; அவை வேண்டுமிடத்துக் கூறப்படும்.

2. தமிழ்மொழி எது?

பனிமலை தோன்றாத முதற்காலத்தில் நாவலந்தேய முழுதும், தொல்காப்பியர் காலத்தில் வேங்கடத்திற்கும் (தெற்கே யமிழ்ந்துபோன) குமரிமலைக்கும் இடையிலும் வழங்கிவந்து, தற்போது வேங்கடத்திற்கும் குமரிமுனைக்கும் இடையில் மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் மைசூர் சீமைக்கும் கிழக்கில் வழங்கிவருவது தமிழ்மொழியாம்.

3. தமிழ் என்னும் பெயர்

தமிழ் என்னும் பெயர்க்குப் பொருத்தமான பொருள்கள் தனிமையாக ழகரத்தைக் கொண்டது, (2) தனிமை என இரண்டு. இவற்றுள், முன்னது பொருளாயின் உலகில் பிறமொழி அல்லது மொழிகள் தோன்றின அல்லது திரிந்த பின்னும் தமிழில் ழகரந் தோன்றின பின்னும் தமிழுக்குப் பெயர் ஏற்பட்டிருத்தல்வேண்டும். பின்னது பொருளாயின் தமிழ் என்னும் பெயர் முதலிலேயே தமிழையோ முதலாவது தமிழர்க்குப் பெயராகிப் பின்பு தமிழையோ குறித்திருத்தல் வேண்டும். இதுவும் பிறநாடும் பிறமொழியும் தோன்றிய பின்னரே நிகழ்ந்திருத்தல் கூடும். பல மொழி வழங்காத போது ஒரு மொழிக்குமட்டும் சிறப்புப் பெயர் அமைதல் அரிது. இவ் வியல்பு பிற பொருள்கட்கும் ஏற்கும். தனிமை என்று பொருள்படும்