உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முன்னுரை

LO

னாட்டிலும் சிறந்தது தமிழ்நாடே; தமிழ்நாட்டிலும் மொழித் திருத்தம் தெற்கு நோக்கியதே.

முத்தமிழ் நாடுகளில் பாண்டி நாட்டையே தமிழ் நாடென்றும், முத்தமிழரசருள் பாண்டியனையே தமிழ்நாடன் என்றும், பண்டைக் காலத்திலேயே சிறப்பித்துக் கூறினர். இன்றும் பாண்டிநாட் டெல்லையில்தான் தமிழின் வளத்தையும் தூய்மையை யும் ஒரு சிறிது காணலாம்.

பாண்டி நாட்டின் பெரும்பகுதி ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னரே சிறிது சிறிதாகத் தென்பெருங் கடலில் மூழ்கிவிட்டது. பாண்டியர் இரீஇய முக்கழகங் (முச்சங்கங்)களும் நீடித்த காலத்தன; நெட்டிடையிட்டன.

இறையனாரகப்பொருளுரையில் முக்கழக வரலாற்றில்,

66

"தலைச்சங்க

மிருந்தார்...நாலாயிரத்து

நாற்பதிற்றியாண்டு சங்க மிருந்தா ரென்ப.

நானூற்று அவர்களைச்

சங்கமிரீஇயினார் காய்சினவழுதி முதலாகக் கடுங்கோனீறாக எண்பத்தொன்பதின்ம ரென்ப.....அவர்.... தமிழாராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரை யென்ப".

66

.....

..இடைச்சங்க மிருந்தார்...மூவாயிரத்தெழு நூற்றியாண்டு சங்கமிருந்தாரென்ப. அவரைச் சங்கமிரீஇயினார் வெண்டேர்ச் செழியன் முதலாக முடத்திருமாற னீறாக ஐம்பத்தொன்பதின் மரென்ப.... அவர் தமிழாராய்ந்தது கபாடபுரத் தென்ப. அக்காலத்துப் போலும் பாண்டியனாட்டைக் கடல் கொண்டது.

66

""

'கடைச்சங்கமிருந்தது....தமிழாராய்ந்து ஆயிரத்தெண்ணூற் றைம் பதிற்றியாண்டு என்ப...சங்கமிரீஇயினார் கடல் கொள்ளப் பட்டுப் போந்திருந்த முடத்திருமாறன் முதலாக உக்கிரப்பெருவழுதி யீறாக நாற்பத்தொன்பதின்மரென்ப...தமிழாராய்ந்தது உத்தர மதுரை யென்ப என்று கூறப்பட்டு உள்ளது.

""

தமிழ்நூல்களைக் கல்லாமலே பன்னூறாயிரம் ஆண்டுகட்கு முன்னே குமரிமுனைக்குத் தெற்கே, இந்தியா தென்கண்டம் (ஆஸ்திரேலியா) ஆப்பிரிக்கா என்ற மூன்று கண்டங்களையும் இணைத்துக்கொண்டு ஒரு பெருநிலப் பரப்பிருந்ததென்றும்,