உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முன்னுரை

27

ஆனால், தெலுங்கிற்குரிய இல், (தெ. இல்லு) என்னுஞ் சொல்லும், கன்னடத்திற்குரிய மனை (க. மன) என்னுஞ் சொல்லும் வட தமிழிலிருப்பதுடன் சமையாசமையங்களில் வழங்கவுஞ் செய்கின்றன. குடி என்னும் இன்னொரு சொல் தமிழுக்கும் வடமொழிக்கும் பின்னிய (Finnish) மொழிகள் எல்லாவற்றிற்கும் பொதுவாக வழங்குகின்றது. தமிழ் இலக்கணமும் சொற்றொகுதியும் இங்ஙனம் பேரளவில் திரவிட வடிவங்களுக்கும் வேர்களுக்கும் பொதுக் களஞ்சியமாகும்.

66

தற்காலத் தெலுங்கும்

iii. "தற்காலக் கன்னடமும் தமிழினின்று வேறுபடுஞ் செய்திகளில் பழங்கன்னடமும், பழ மலையாளமும், துளுவும், துடவும், கோண்டும், கூவும் தமிழுடன் ஒத்திருத்தல் தமிழின் தொன்மைக்கும் தூய்மைக்கும் மற்றொரு சான்றாகும்.

iv. "பல தெலுங்கு வேர்களும் விகுதிகளும் தமிழ் வடிவங்களின் திரிபாயுள்ளமை, பின்னவற்றின் மிகு தொன்மையை வலிமையாய் உறுதிப்படுத்தும்.

v. "தமிழின் தொன்மைக்கு மற்றொரு சான்று அதிலுள்ள வடசொல் தற்பவங்களின் பெருஞ்சிதைவாகும்.

vi. "தமிழின் இலக்கியப் பண்படுத்தத்தின் மிகுதொன்மை கல்வெட்டுகளாலும் ஊகித்தறியப்படும்."

(q. q- 11.83-9)

"(கிறித்தவ மறையில்) 'அரசர்கள்' (இராஜாக்கள்) 'நாளாகமம்' என்னும் புத்தகங்களின் எபிரேய மூலத்தில், கி.மு. சுமார் 1000 ஆண்டுகட்குமுன் தர்சீசு அல்லது ஒப்பீர் என்னும் துறைமுகத்தினின்று சாலோமோன் கப்பல்களிற் கொண்டு போகப்பட்ட சரக்குகளைக் குறித்த பட்டியில், மயிலுக்குக் கூறப்பட்டுள்ள சொல் உலகத்தில் எழுத்திற் காணப்படும் திராவிடச் சொற்களில் முற்பட்டதாகும். இது அரசர்களில் ‘துகி' என்றும் நாளாகமத்தில் தூகி என்றும் உள்ளது.... மயிலுக்குப் பழஞ் செய்யுளிலுள்ள தூய தமிழ் மலையாளப் பெயர் (அழகிய) தோகையை யுடையது என்று பொருள்படும் தோகை என்பது. (q. q-11.91)