உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைநிலையியல்

83

பாலும், கடவுளும் சிவனும் ஒன்றே என்பது பெறப்படும். ஆயினும், இல்லறத்தார்க்கும் பொதுமக்கட்கும் எளிதாய் விளங்குமாறு, இறைவனையும் அவனாற்றலையும் பேருலகத் தந்தையும் தாயுமாக ருவகித்துச் சிவனும் சிவையும் என்றனர். உலகிலுள்ள உயரிய உயிரினங்களெல்லாம் ஆணும் பெண்ணுமாக அமைந்தே கான் முளையைப் பிறப்பித்தலாலும், தாய்மைப் பண்பிலேயே அருண் மைப் பண்பு சிறந்திருத்தலாலும், இறைவனை அம்மையப்பனாகக் காட்டினார் அறிஞர். உண்மையில், இறைவனிடத்தில் ஆண்மையு மில்லை; பெண்மையுமில்லை. அவன் கட்புலனான உருவின்றி எங்கும் நிறைந்திருக்கும் ஆவி வடிவான பேராற்றல்; எண்ணுக்கும் எட்டாது எல்லாங் கடந்தவன்; இயற்கையாகவே எல்லாம் அறிந்தவன்; இமைப்பொழுதிற் கருதிய வளவிலேயே எத்துணையு மின்றி எல்லாம் படைக்க வல்லவன்; எவ்வகையிலும் பகுக்கப் படாத ஒப்புயர்வற்ற தன்னந்தனிப் பொருள்; தொடக்கமிலியாக முத்தொழிலுந் தானே செய்து வருபவன்; இம்மியும் திரியாது என்றும் ஒரே நிலைமையில் இருப்பவன்.

"படைத்து விளையாடும் பண்பி னோனும் துடைத்துத் துயர்தீர் தோற்றத் தோனும் தன்னில் வேறு தானொன் றிலோனும்

அன்னோன் இறைவ னாகுமென் றுரைத்தனன்

மணிமேகலைக்கு அறிவுறுத்திய சிவனியக் குரவன்.

""

(27:92)

இங்ஙனம் மூன்றாயிருந்த சிவன் தொழிலை மறைத்தல் (துரோபவம்), அருளல்(அனுக்கிரகம்) என்னும் இரண்டு சேர்த்து ஐந்தாக்கி, அவற்றைச் செய்பவர், முறையே நான்முகன், திருமால், உருத்திரன், பெருவுடையான்(மகேசுவரன்), என்றும் நல்லான் (சதாசிவன்) என்னும் ஐவர் என்றும்;

ஐந்தொழிலும், பருவியல்(ஸ்தூல) ஐந்தொழில், நுண்ணியல் (ஸூக்ஷ்ம) ஐந்தொழில், அதிநுண்ணியல் ஐந்தொழில் என மூவகைப் படுமென்றும்;

சிவனைச் சிவம், ஆற்றல்(சக்தி), என்றும் நல்லாண்மை (சாதாக்கியம்), பெருவுடையான்மை(ஈசுரம்), தூவறிவை அல்லது வாலறிவம்(சுத்தவித்தை) என்னும் ஐம் மெய்ப்பொருளாகக் கூறு படுத்தி; அவற்றில், முறையே, அறிவே கொண்ட சிவனும், வினையே கொண்ட ஆற்றலும், அறிவும் வினையும் சமமாகக் கொண்ட என்றும் நல்லானும், அறிவு குன்றி வினை மிக்க பெருவுடையானும், வினை குன்றி அறிவு மிக்க வாலறிவனும்(வித்தியேசுவரனும்) நின்று தொழிற்படுவரென்றும்;