உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

உலவுதல் = வளைதல், சுற்றுதல், திரிதல், உருளுதல்.

உலகு-உலகம் - வ. லோக.

உலவு உலகு

உலகு = உருண்டையாயிருப்பது, சுற்றுவது.

தமிழர் மதம்

வினை, அறிவு, விருப்பம் ஆகியவற்றைத் தோற்றுவிப்பன ஆதனோடு கூடிய அகக்கரணங்களும் புறக்கரணங்களுமான ஆத மெய்ப்பொருள்களாதலால், கலை, அறிவம்(வித்தை), விழைவு, (அராகம்) என்னும் அறிவ மெய்ப்பொருள்கள் உண்டென்பது மிகைப்படக் கூறலாம். ஆகவே, முற்கூறிய இருபத்தெண் மெய்ப் பொருள்களே உண்மையானவை என அறிக. சித்தம், குணம், முதனிலை(பிரகிருதி), மான் என்பன ஒருபொருட் சொற்கள்.

திரவிட நாகரிகத்தை ஆரியமாகக் காட்டுவதற்கு, பொருட் டொகைகளைப் பெருக்குவதும், புதுச் சொற்களைப் புணர்ப்பதும் ஆரியர் வழக்கமாகும்.

திருவாசகத் திருவெம்பாவைப் பழைய உரைமுகத்தில், தொள் ளாற்றல்களின் (நவ சக்திகளின்) பெயர் அம்பிகை, கணாம்பிகை, கௌரி, கங்கை, உமை, பராசத்தி, ஆதி சத்தி, ஞான சத்தி, கிரியா சத்தி, என்றும்; உரையுள் மனோன்மணி, சர்வபூத தமனி, பெலப் பிரதமனி, பெலவிகரணி, காளி, இரவுத்திரி, சேட்டை, வாமை, சிவ சத்தி என்றும் கூறப்பட்டுள்ளன. இவை யெல்லாம், விழுப்பொரு ளொன்றுமின்றி வெறுஞ் சொல்லாரவாரத்தால் தமிழரை மயக்கி அடக்கி யாள்வதற்கே புனையப்பட்டன என அறிக.

சொல்லுலகம்(சத்தப் பிரபஞ்சம்)

மெய்ப்பொருளியலில், மொழித்துறையில்தான், ஆரியர் ஏமாற்றும் தமிழர் ஏமாறலும் இருசாரார் அறியாமையும் விளங்கித் தோன்றுகின்றன.

சொல்லுலகம், பொருளுலகம் (அர்த்தப் பிரபஞ்சம்) என உலகம் இரு வகைப்படும் என்றும்; அவற்றுட் சொல்லுலகம் வண்ணம் அல்லது வரணம்(வர்ண), கிளவி(பதம்), மந்திரம்(மந்த்ர) என முத்திறப்படும் என்றும்; வரணம் ஐம்பத்தொன்றும், பதம் எண்பத்தொன்றும், மந்திரம் பதினொன்றும் ஆகுமென்றும்; அறிவுக் கரணியமாயிருப்பதால், சொல்லுலகம் தூய(சுத்த) மாயையின் கருமியம்(காரியம்) என்றும்; அது உந்தியிலிருந்து எழுப் பப்படும் உதானன் என்னும் காற்றினால் விளைவதென்றும்; வாய்ச் சொல்(வாக்கு) நுண்ணிலை(சூக்குமை), கருநிலை (பைசந்தி), இடைநிலை(மத்திமை), உருநிலை(வைகரி) என நானிலையதென் றும்; அந் நால்வகை வாய்ச்சொல்லாலேயே வேறுபடுத்துணர்வு