உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைநிலையியல்

91

முடித்த பூஞ்சாற்றூர்ப் பிராமணனை, ஆவூர் மூலங்கிழார் மான மிழந்து மதிகெட்டுப் பாடியுள்ளார். சோழனும் பாண்டியனும் தன்னை இகழ்ந்தாரென்று செங்குட்டுவன் வெகுண்டபோது, மாடல வேதியன் அவனைப் புகழ்ந்து சினந் தணிவித்து வேள்வி யியற்றச் சொன்னது, நச்சுத் தன்மையான வலக்கார மாகும்.

அண்ணாமலை பல்கலைக் கழக அறிவியற் கட்டட அடிப் படைக் கல் நாட்டியபோது, தில்லையிலிருந்து ஒரு பிராமணர் வந்து எரி வளர்த்து வேத மந்திரம் ஓதினார். இது ஆரிய வழிபாடே யன்றித் தமிழ வழிபாடாகாது.

சிறுதெய்வ வணக்கம்

சிறுதெய்வங்களையே வழுத்தும் வேத மந்திரங்களைக் கோவில்களில் ஓதுவிப்பதும், மழை வேண்டும்போது வாரண மன்றாட்டை(வருண ஜபத்தை)ச் செய்விப்பதும், மனை கட்டும் போது 'வாஸ்து புருஷ(ன்)' என்னும் மனைத்தெய்வத்தை வணங்குவ தும், பெருந்தேவ வழிபாட்டிற்கு மாறான சிறுதெய்வ வணக்கமாம். கடவுட்பெய ரிழிபு

எங்கும் நிறைந்து எண்ணிற்கும் எட்டாது எல்லாவற்றையுங் கடந்து நிற்கும் பரம்பொருளாகிய கடவுட் பெயரை, பெருந்தேவ மதத்தில் ஆள்வதும் பொருந்தாதிருக்கையில், சிறுதெய்வங்கட்கும் முனிவர்க்கும் துறவியர்க்கும் குருக்கட்கும் பிராமணர்க்கும் முறையே ஆண்டதும் பன்மையில் வழங்கியதும், கடவுட்பெய ரிழிபாம்.

பல்தெய்வ வணக்கம்

உண்மைத் துறவியரும் பெரும் புலவரும் சிறந்த இறையடி யாரும் ஒரு பெருமட நிறுவனருமான குமரகுருபர அடிகளும், தம் மீனட்சியம்மை பிள்ளைத் தமிழ் என்னும் பனுவலில், விநாயகன், திருமால், (சித்திவிநாயகன்), சிவபெருமான், முருகன், நான்முகன், தேவர்கோன், திருமகள், கலைமகள், காளி, எழுமாதர், முப்பத்து மூவர் என்னுந் தெய்வங்களையும்,

முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழ் என்னும் பனுவலில், விநாயகன், வினைதீர்த்தான்(வைத்தியநாதன்), தையல் நாயகி, (கற்பக விநாயகன்), நான்முகன், தேவர்கோன், திருமகள், கலைமகள், எழு மாதர், முப்பத்து முக்கோடி தேவர் என்னும் தெய்வங்களையும் வணங்கியிருத்தல்.