உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

தமிழர் மதம்

வீடும் நிலமுமில்லாத ஏழைப் பிராமணர்க் கெல்லாம், கோவில்களில் ஊட்டுப் புரைகள் அமைக்கப்பட்டன.

பெருங்கோவில்களில், ஆயிரக்கணக்கான பிராமணப் பூசகர் எளிய பணி செய்து இன்பமாக வாழ்ந்து வந்தனர். தில்லையில் மட்டும் மூவாயிரம் பேர் இருந்தனர். அதற்குக் கேட்பார் கேள்வி யில்லை.

இலவசக் கல்வி

முக்கூடல், எண்ணாயிரம், திருவொற்றியூர் முதலிய பல இடங்களில், பிராமண மாணவர்க்கு மட்டும் ஊண், உடை, உறையுள், எண்ணெய் முழுக்கு, நோய் மருத்துவம், பொத்தகம், கல்வி ஆகிய அனைத்தும் இலவசமாக நடைபெற்றது.

கொலைத்தண்டனை யின்மை

பிராமணனுக்குக் கொலைத் தண்டனையாவது, அவன் தலையை மொட்டையடித்து அவன் பொருள்களுடன் அவனை வேற்றூர்க்கு அனுப்பிவிடுவதே என்று மனுதரும சாத்திரம் கூறுகின்றது. அரசனுட்பட, யாரேனும் ஒருவன் ஒரு பிராமணனைக் கொன்றுவிடின், அப் பிராமணனது ஆவி கொன்றவனைத் தொடர்ந்து பழிவாங்கிவிடும் என்று பிராமணர் ஒரு கருத்தைப் பரப்பிவிட்டனர். அதனால், கேரள நாடுகளில், பிராமணக் குற்ற வாளிக்குக் கொலைத்தண்டனை விலக்கப்பட்டிருந்தது.

மூன்றாங் குலோத்துங்கச் சோழன் ஒரு கொலைக் குற்றவாளி யான பிராமணனுக்குக் கொலைத்தண்டனை யிட்டான். அதனாற் பிராமணரிடையே ஒரு படபடப்பு ஏற்பட்டதாகத் தெரிகின்றது. அதுபற்றிய கதை வருமாறு :

குலோத்துங்கச் சோழன் ஒரு பிராமணனுக்குக் கொலைத் தண்டனையிட்டான். அதனால் அப் பிராமணன் ஆவி அரசனை அல்லும் பகலும் தொடர்ந்தது. அரசன் அதினின்று தப்புவதற்கு எல்லாச் சிவன் கோவில்களிலும் வழிபட்டான். இறுதியில் திருவிடைமருதூரில் அப் பழி நீங்கிற்று. ஆயினும், அரசன் கோவிலி னின்று வெளியே வந்த போது, அங்கும் அவ் வாவி காத்துக் கொண் டிருந்ததைக் கண்டு இறைவனிடம் முறையிட்டான். இறைவன் திருவுண்ணாழிகைச் சுவர்ப் பக்கத்திலுள்ள ஒரு துளை வழியாக அவனைப் பின்பக்கம் போக்கி, மேலைக் கோபுரவாசல்வழித் தப்புவித்தான். அதன் பின்னும், அரசன் அஞ்சித் தன் குதிரை