உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைநிலையியல்

97

இலக்கிய வளர்ச்சியின்மை, தேவார மறைப்பு, தென்சொல் வளர்ச்சி யின்மை, வடசொற் கலப்பு, தென்சொல் லிழிபு, தென்சொல் வழக் கழிவும் இறந்துபாடும், செந்தமிழ் கொடுந்தமிழ் மொழிகளின் உறவு முறிவு முதலியன தமிழுக்கு நேர்ந்த தீங்குகளாம்.

(4) தமிழினக் கேடு

தமிழன் தாழ்வு, பிறவிக்குலப் பிரிவினையும் ஒற்றுமைக் கேடும், தன் னினப் பகையும், தொழிலிழப்பும் பிழைப்பிழப்பும், எளியார்க்கு அறப்பேறின்மை, தமிழப் பண்பாட்டழிவு, அகக் கரண வலியிழப்பு, தீண்டாமையும் கோவிற் புகவின்மையும், பிரா மணர்க் கச்சம், ஆரியப் பழக்க வழக்க மேற்கொள்வு, வரலாற்று மாற்றம் முதலியன தமிழினத்திற்கு நேர்ந்த தீங்குகளாம்.

(5) தமிழ மத உட்போர்

கிறித்தவமும் இசலாமும் போலச் சிவனியமும் மாலியமும் வேறுபட்ட மதங்களாம். ஆயினும், இரண்டும் இறைவனையே வெவ்வேறு பெயரால் வணங்குவனவாம். ஆதலால், சிவனைப் போன்றே திருமாலும் முத்தொழில் செய்பவன் என்று கூறப்படும்.

"சமயகோடிக ளெலாம், தந்தெய்வம் எந்தெய்வமென் றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது"

என்று தாயுமானவரும்,

"முன்னையொப் பாயுள்ள மூவர்க்கு மூத்தவன். என்று திருமூல நாயனாரும்,

"தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழற் கமலமன்ன தாள்கண்டார் தாளே கண்டார் தடக்கைகண் டாருமஃதே வாள்கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக்கண்டார் ஊழ்கொண்ட சமயத் தன்னான் உருவுகண் டாரையொத்தார்'

என்று கம்பரும், பாடியிருப்பதை நோக்குக.

சிறுதெய்வ வணக்கத்திலேயே நீண்ட காலமாக அடிப்பட்டுக் கடவுளைப்பற்றிக் கருத்தில்லாத ஆரியர், சிவனும் திருமாலும் வேறென்று கொண்டு அவரை முத்திருமேனிக் கூண்டிற்குட் புகுத்தி, ஒவ்வொரு தொழிலே வகுத்ததனால், சிவனியரும் மாலியருமான தமிழரும் மயங்கி, முத்தொழி லிறைமையில்லாத சிவ மாலருள் எவன் பெரியவன் என்று வினா வெழுந்து, அதனால் தமிழர்க்குள் ளேயே கடும் போர் மூண்டது.

சிறந்த சிவனடியானான இரண்டாங் குலோத்துங்கச் சோழன் (1138-50) இப் போரில் ஈடுபட்டு, "சிவனிலும் பெரிய தெய்வ மில்லை" என்னும் வாசகம் பொறித்த செப்புப் பட்டயத்திற் கையெழுத்திடு