உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

தமிழர் மதம்

டார். அந் நூற்கு அவர் கருத்திற்கிணங்கிப் பல பிராமண அறிஞரும், நெல்லைச் சிதம்பர ராமலிங்கம் பிள்ளை, தச்சநல்லூர் இலக்கு மணப் போற்றி ஐயா, அம்பாசமுத்திரம் காந்திமதிநாதப் பிள்ளை, திருச்சிராப்பள்ளி ஆ. சுப்பிரமணியப் பிள்ளை, உறந்தைப் புலவர் பெரியசாமிப் பிள்ளை, கோவை (C.K.) சுப்பிரமணிய முதலியார், தஞ்சை அராவ ஆண்டகை (ராவ் பஹதூர்) (K.S.) சீநிவாசப் பிள்ளை, சீகாழிப் புலவர் முத்துத் தாண்டவராயப் பிள்ளை, உயிர் நூலா சிரியர் ப.மு. சோமசுந்தரம் பிள்ளை, ச. சதாசிவ முதலியார், யாழ்ப்பாணம் சிவபாதசுந்தரம் பிள்ளை, ச. சதாசிவ முதலியார், யாழ்ப்பாணம் சிவபாதசுந்தரம் பிள்ளை, கைலாசலிங்கம் பிள்ளை, அருளம்பலம், ஆறுமுகம் பிள்ளை, கணேச பண்டிதர், சுவாமிநாத பண்டிதர் ஆகிய தமிழ அறிஞரும், நன்மதிப்புரையும் பாராட்டு ரையும் வழங்கியுள்ளனர்.

நால்வேதம் அல்லது நான்மறை, ஆறங்கம், ஆகமம் என்பன ஆரிய நூல்களே என்பதும், திருக்குறள் தவிர இதுபோதுள்ள மற்றைப் பண்டை நூல்களிலெல்லாம் அந்தணர் என்பது பிராம ணரையே குறிக்கும் என்பதும் சரியே. ஆயின், ஆரியச் சார்பான இற்றைப் பண்டை நூல்களெல்லாம், ஆரியர் தென்னாடு வந்து தம்மை நிலத்தேவரென்றும் தம் மொழியைத் தேவமொழி யென்றும் சொல்லி ஏமாற்றி, தம் மேம்பாட்டை நாட்டி மதத்தையும் வரலாற் றையும் திரித்த பின்னரே இயற்றப்பட்டவை யாதலால், அவற்றை முதனூல்களென மயங்கி, அவற்றிற்குமுன் தமிழ்நூல்கள் இருந்த தில்லையென்று கொள்வது, வரலாற்றறிவும் மொழியாராய்ச் சியும் ன்மையால் நேர்ந்த விளைவாம். இவ்விரண்டும் போதிய அளவு இன்மையாலேயே, ஆரிய ஏமாற்றையும் அதனால் தமிழர் அடைந்துவரும் பெருங்கேட்டையும் கண்ட அடிகளும் பேராசிரி யரும், இனநல நன்னோக்கமாகவே, நான்மறை தமிழர்க் குரியவை யல்ல வென்றும், இறந்துபட்ட தமிழ்நூல்க ளென்றும், கூறலாயினர். திருமந்திரம் ஆரியம் தமிழகத்தில் வேரூன்றிய 6ஆம்

நூற்றாண்டு நூலாதலால்,

"மாரியுங் கோடையும் வார்பனி தூங்கநின் றேரியு நின்றங் கிளைக்கின்ற காலத்து வாரிய முத்தமி ழும்முட னேசொல்லிக் காரிகை யார்க்குங் கருணைசெய் தானே

99

"அவிழ்க்கின்ற வாறும் அதுகிட்டு மாறும் சிமிட்டலைப் பட்டுயிர் போகின்ற வாறும் தமிழ்ச்சொல் வடசொல் லெனுமிவ் விரண்டும் உணர்த்து மவனை யுணரலு மாமே

"9