உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிகழ்நிலையியல்

105

வடமுடி யொன்றாகிய மகேந்திர மலையில், இறைவனருள் பெற்ற குரவனிடம், தொல்காப்பியர் காலமாகிய கி.மு. ஏழாம் நூற்றாண் டிற்குமுன் பாடங் கேட்டவர் தமிழராகவே இருந்தது மட்டுமன்றி அவர் பாடங் கேட்டதும் அதை நூலாக வரைந்ததும் தனித்தமிழ் வாயி லாகவே நிகழ்ந்திருத்தல் வேண்டும். அந் நூல் அல்லது நூல்களே, பிற்காலத்து வடமொழி யாகமங்கட்கு மூலமாயிருந் திருத்தல் வேண்டும். அம் மூலநூல்கள் யாவும் ஆரியரால் அழிக்கப் பட்டுவிட்டன.

பிராமணரே ஓதவும் ஓதுவிக்கவும், இருவகைச் சடங்கும் கோவில் வழிபாடும் நடத்தவும், இவ்வகையில் தமிழரை என்றும் அடிமைப்படுத்தவும், வேண்டுமென்னுங் குறிக்கோளுட டனேயே, வடமொழி யாகமங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

ஆகமம் என்னும் வடசொற்குத் தோன்றியது என்றே பொருள். தோன்றற் புணர்ச்சியை வடமொழியாளர் ஆகமசந்தி என்று கூறுதல் காண்க. குறியீட்டு முறையில் ஆகமத்தைத் 'தோன்றியம்' எனலாம். தோன்றியது என்னும் பொருளாலேயே, ஆகமங்கள் வடநாட்டு ஆரியர் தென்னாடு வந்தபின் புதிதாகத் தோன்றியவை என்பதை, ஆகமம் என்னுஞ் சொல் உணர்த்துதல் காண்க.

இனி, ஆகமம் என்னும் வடசொல்லும் தென்சொல் அடி வேரினின்றே தோன்றிய தென்பதை, கீழ்வருஞ் சொல் வரலாற்றால் தேர்ந்து தெளிக.

உய்தல் = செல்லுதல். உய்த்தல் = செலுத்துதல். உய் - இய் - இய - இயவு = 1. செலவு. "இடைநெறிக் கிடந்த இயவுக்கொண் மருங்கில்” (சிலப். 11:168). 2. வழி. "இயவிடை வருவோன்' (LDGM) CLD. 13:16).

இய -இயல். இயலுதல் = 1. செல்லுதல். 2. நடத்தல். “அரிவை யொடு மென்மெலவியலி” (ஐங்.175). (3) கூடியதாதல்.

66

இயவு - இயவுள் = (1) வழி. (2) நடத்துவோன், தலைவன், இறைவன். பெரியோ ரேத்தும் பெரும்பெய ரியவுள்" (திரு முருகு. 274).

யவு - (இயகு) - இயங்கு. இயங்குதல் = செல்லுதல். இயங்கு - இயக்கு இயக்கம் = செலவு.

-

-

-

இய் எய் எய்து. எய்துதல் = நடத்தல், நிகழ்தல், சென்றடை தல், அடைதல்.

எய் ஏ. ஏதல் = போதல். இவ் வினை இன்று வழக்கற்றது.