உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிகழ்நிலையியல்

"பல்லுயிர்த் தொகுதியும் பயன்கொண் டுய்கெனக் குடிலை என்னும் தடவயல் நாப்பண்

அருள்வித் திட்டுக் கருணைநீர் பாய்ச்சி

வேதம் என்னும் பாதபம் வளர்த்தனை

""

111

என்று ‘பண்டார மும்மணிக் கோவை'யிற் பாடியிருப்பதே, வேதம் பற்றி வழிவழித் தமிழரிடை வழங்கி வந்த குருட்டு நம்பிக்கையைக் காட்டும்.

திருப்பனந்தாள் மடத் தலைவராகத் திருத் தவத்திருச் சுவாமி நாதத் தம்பிரான் அவர்கள் இருந்த காலத்தில், ஒரு முறை சென்று அவர்களைக் கண்டு, என் தமிழாராய்ச்சியை எடுத்துக் கூறி, அதை வெளியிடப் பொருள் வேண்டினேன். தம்பிரான் அவர்கள், நான் சொன்னதை அமைதியாகச் செவிகொடுத்துக் கேட்டு, அடுத்து வரும் குருபூசை நாளன்று வரச் சொன்னார்கள். மகிழ்ச்சியோடு திரும்பினேன்.

ஆயினும், நான் கருதியது கைகூடுமா வென்று ஓர் ஐயம் எனக்கிருந்தது, ஏனெனின், அங்கு ‘இராயசம்' என்றிருந்த பிராமண எழுத்தாளர், நான் பண்டாரம் திருமுன்பு செல்லு முன்பே என்னை அழைத்து, தம் அகவைக்கும் அறிவிற்கும் பதவிக்கும் தகாத பல வினாக்கள் வினவினார். நான் தங்கியிருந்த மடத்து விடுதிமேலாள ரும், என்னைப் பண்டாரத் திருமுன்பு அழைத்துச் சென்ற பணியா ளரும், மடத்துக் காசுக் கணக்கரும் பிராமணரே. அதோடு, பெரும் பேராசிரியர் உ. வே. சாமிநாத ஐயர் அங்கு வந்து தங்கும் தனி மனை யையுங் கண்டேன். அவர் தம்பிரானுக்கு ஆசிரியராயிருந்தவர் என்றும் கேள்விப்பட்டேன்.

ஆதலால், 'வாய்த்தால் தமிழுக்கு; வாய்க்காவிட்டால் வட மொழிக்கே' என்று கருதிக்கொண்டு, குருபூசை நாளன்று சென்றேன். பெரும் பேராசிரியரும் வந்திருந்தார். அவரும் தம்பிரான் அவர் களும் ஒருங்கே நின்றவிடத்துச் சென்று கண்டேன். “ஐயர் அவர் களைப்பற்றித் தெரியுமா?” என்று தம்பிரான் அவர்கள் வினவி னார்கள் . "தெரியும்" என்றேன். ஐயரோ, ஒருமுறை நான் அவர் இல்லஞ் சென்று கண்டிருந்தும், தமக்கு நினைவில்லையென்றார். அவ்வளவுதான், தம்பிரான் அவர்கள் அப்பாற் சென்றுவிட்டார்கள். நானும் விடுதிக்குத் திரும்பினேன்.

எத்தனையோ ஆராய்ச்சிக் கட்டுரைகளும் நூல்களும் வெளி யிட்ட பின்பும், தமிழை வளர்ப்பதாகச் சொல்லிக்கொள்ளும் தி.மு.க. அரசும், வெவ்வேறு நிலைமையிலுள்ள தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களும், என் ஆராய்ச்சியைப் போற்றாதபோது, நிலத்தேவர்