உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிபுரையியல்

139

இக்காலத்தும், வயவர்(Sir) சந்திரசேகர வெங்கட்டராமன் போன்றே, கோவைக் கோ. துரைசாமி நாயுடும்(G.D. Naidu) புதுப் புனைவாற்றலர். முன்னவர் அறிஞர்க்குப் பயன்படும் கருத்தியல் ஆராய்ச்சிமட்டும் செய்தவர்; பின்னவரோ, அனைவர்க்கும் பயன் படும் காட்சியியற் கருவிகளையும் இறும்பூதுகளையும் செய்தவர். ஆயினும், அவரைப் பேராயமும் போற்றவில்லை; தி.மு.க. வும் போற்றவில்லை.

குடந்தை இராமானுசம் போன்றே, செங்கோட்டைப் பர்.(Dr) சிவசங்கர நாராயணப் பிள்ளையும், மேனாட்டார் போற்றுமளவு கணிதத் திறவோர். ஆயினும், பிராமணர்க்குள்ள இனவுணர்ச்சி தமிழருக்கின்மையால், அவருக்கு விளம்பரம் ல்லாமலே

போயிற்று.

முகவை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தமிழர், இருகண்ணும் தெரியாதவர், எத்தனை பேரெண்களையும் உள்ளத்திற் கொண்டு நால்வகைக் கணக்குஞ் செய்யவும், எத்துணைப் பேரெண்ணிற்கும் நான்மடி வேர் காணவும், வல்லவரா யிருந்தார்.

பல்கலைக்கழக ஆள்வினைத் திறமையிலும் ஆங்கிலப் பேச் சாற்றலிலும், பர்.(Dr) வயவர்(Sir) ஆ. இலக்குமணசாமி முதலியாரினும் மிக்கவர், பிராமணர்க்குள் இருக்கவே முடியாது. இங்ஙனம் ஏனைத் துறைகளிலும் எத்தனையோ பேர் உள்ளனர். தமிழரின் தன்னலமும் பொறாமையும் இனவெறுப்பும் பலர் தலையெடுக்க வாய்ப் பில்லாமற் செய்துவிடுகின்றன.

பிராமணர் கல்வித் திறமையிற் சிறத்தற்கு இன்னொரு கரணி யமும் உண்டு. அது மறைவான இனக்கலப்பு.

மக்களுள் நால்வேறு வரணம் போன்றே நால்வகைக் கலப்புக் குலமும் உள்ளன வென்று, மனுவின் குலவொழுக்க நூல் கூறுகின் றது. மேல்வரண ஆடவனுக்கும் கீழ்வரணப் பெண்டிற்கும் பிறந்தவன் அனு லோமன். கீழ்வரண ஆடவனுக்கும் மேல்வரணப் பெண்டிற் கும் பிறந்தவன் பிரதிலோமன். அனுலோம ஆடவனுக்கும் பிரதி லோமப் பெண்டிற்கும் பிறந்தவன் அந்தராளன். பிரதிலோம் ஆடவனுக்கும் அனுலோமப் பெண்டிற்கும் பிறந்தவன் விராத்தியன்.

மேல் மூவரணத்தாரும் தத்தமக்குக் கீழ்ப்பட்ட வரணங்களி லும் அல்லது வரணத்திலும் பெண் கொள்ளலா மென்று, மனுநூல் கூறுகின்றது. ஆயின், கீழ்மூவரணத்தாரும் தத்தமக்கு மேற்பட்ட வரணத்திற் பெண் கொள்ளலா மென்று நெறியீட்டு முறையாய்க் கூறவில்லை. ஆயினும், அவ் வழக்கம் தொன்றுதொட்டு இருந்தே வந்தது. இதை மனுநூலுங் கூறுகின்றது.