உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிபுரையியல்

155

மாந்தன் மனத்தை இறுகப் பிணிக்கக்கூடிய பற்றுகளுள், மிகுந்த வலிமையுடையது மதப்பற்று அல்லது கடவுட் பற்றே. தமிழன் அரும்பாடுபட்டுக் கண்ட மதத்தை ஆரியனது எனின், ஆரியனுக்கு உயர்வும் தமிழனுக்குத் தாழ்வும் ஏற்படுவதோடு, உறைத்த மதப்பற்றுள்ள தமிழனுக்கிருக்கும் ஆரிய அடிமைத்தனம் இடும்புத் தனமாக இறுகவே செய்கின்றது. அதனால் ஆரியன் சுரண்டலும் அதிகரிக்கின்றது. இது கண்ணாரக் காணும் செய்தி.

மாந்தன் புறநாகரிகத்தினும் சிறந்தது அகநாகரிகம். அதன் விளைவே பல்வேறு பண்பாட்டறிவியல்கள். அவற்றுள் தலைமை யானது மதவியல் அல்லது மெய்ப்பொருளியல் என்றே, மேலை யராலும் கருதப் பெறுகின்றது.

"அன்பிலா ரெல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு.

என்பது திருக்குறள் மறை.

""

"அன்புஞ் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்

அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே."

என்பது திருமந்திர மறை.

(குறள்.4)

(திருமந்திரம். 257)

இங்ஙனம் உயர்ந்த தேவிக அறத்தை வலியுறுத்தும் மதவியல், பகுத்தறிவிற்கு மாறானதென்று எந்தப் பகுத்தறிவாளன் சொல்ல முடியும் ?

கத்தரிக்காயறுக்க வாங்கிய கத்தி கழுத்தறுக்குங் கருவியா யிருப்பின், அது கழுத்தறுத்தான் குற்றமா? கத்தியின் குற்றமா? மாந் தரையெல்லாம் கடவுளின் மக்களாக்கி உடன்பிறப்பன்பால் ஒன்று பட்டின்புற்று வாழச் செய்யும் உயர்ந்த மதவியலை, ஒரு தன்னலக் கொள்ளைக் கூட்டம் தாம் வாழவும், பிறர் தாழவும் பயன் படுத்தின், அக் குற்றம் எங்ஙன் மதவியலைச் சாரும்?

இன்று கடவு ளில்லை யென்று சொல்வாரும் கொள்வாரும், தமக்குச் சமமானவரும் தம்முடன் உண்ணும் தகுதியுடையவருமான வகுப்பாருடனும் மணவுறவு கலவாது, ஆரியன் வகுத்த வழியிலேயே நின்று, என்றும் தம் பிறவிக் குலத்துள்ளேயே கொள்வனை கொடுப் பனை செய்துகொள்வது, எங்ஙனம் பகுத்தறிவுச் செயலாகும்? இதனாலும், மதம் மக்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை யன்றென்பது பெறப்படுகின்றதன்றோ? "பழியோரிடம் பளகோரிடம்.

29