உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமரிநிலையியல்

தீமை என்னுஞ்சொல் தோன்றியிருப்பினும், பிற பூதங்கள் செய்யாத பல்வேறு பெருநன்மைகளைச் செய்வதால், சிறப்பாக இரவில் இடம்பெயர்விற்கும் அறிவுப் பேற்றிற்கும் உணவு தேடற்கும் இன்றி யமையாத ஒளியைத் தருவதால், தீயானது இன்றும் போற்றப்படு வதிலும் விளக்கேற்றியவுடன் வணிகரால் தொழப்படுவதிலும்

வியப்பொன்றுமில்லை.

19

வளி(காற்று): நாற்பூதங்களுள்ளும் வலி மிக்கது வளி. "வளிமிகின் வலியுமில்லை" (புறம். 51). வலிமை மிக்கவனை வளிமகன்

என்பர்.

"அரக்கில்லை வளிமக னுடைத்து

(கலித்.25)

மென்காற்றாகிய தென்றலாலும் தண்காற்றாகிய கொண்ட லாலும் இன்பத்தையும், வெங்காற்றாகிய கோடையாலும் குளிர் காற்றாகிய வாடையாலும் துன்பத்தையும், வன்காற்றாகிய சூறாவளி யால் துன்பத்தொடு சேதத்தையும் கண்ட மாந்தர், வெங்காற்றும் வன்காற்றும் வீசாவாறு காற்றுத் தெய்வத்தை வேண்டி வந்தனர். இதை,

"முளிமுதன் மூழ்கிய வெம்மைதீர்ந் துறுகென

வளிதருஞ் செல்வனை வாழ்த்தவு மியைவதோ" (UIT 6060. 14)

என்னும் கலித்தொகை யடிகள் உணர்த்தும்.

வளிதருஞ் செல்வன் என்றது காற்றுத் தெய்வத்தை. வேனிற் காலத்தில் வெங்கான வழியாகச் செல்லுங் கணவன்மீது, வெம்மை யாக வீசாவாறு காற்றுத் தெய்வத்தையே தலைவி வேண்டக் கருதி, தன் கற்பினால் மயங்கினாள். முதல் தாழிசையில் "இன்னிசை யெழிலி" யென்றது முகில் அல்லது மழைத் தெய்வத்தை. இரண்டாம் தாழிசையில் “கனைகதிர்க் கனலி” என்றதே ஞாயிற்றை. நச்சினார்க்கினியர் மூவிடத்தும் ஞாயிறென்றே பொருள்கொண்டு, ஞாயிற்றைப் பாலைக்குத் தெய்வமாகக் கூறினார். பாலைத் தெய்வம் காளியே. கதிரவனும் திங்களும் நானிலத்திற்கும் ஐந்திணைக்கும் பொதுவாகும். தொல்காப்பியர், "மாயோன் மேய” (தொல். 951) என்னும் நூற்பாவில், பாலைக்குத் தெய்வங் கூறாது விட்டதால், இம் மயக்கம் நேர்ந்தது.

இருசுடர்

கதிரவன் : பகலைத் தோற்றுவித்துப் பல்வேறு தொழிலும் உலக வாழ்க்கையும் நடைபெறச் செய்யும் கதிரவனை வணங்கியது, இயற்கைக்கு முற்றும் ஒத்ததே.