உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமரிநிலையியல்

37

சிவனையடைந்தவரின் மும்மாசும் எரிந்து சாம்பலாய் விடு கின்றன என்பதை உணர்த்தற்கே, திருநீறு பூசப்பட்டது. அது பூதி (பிங்.) என்றும் சொல்லப்படும். புழுதிபூதி தூள்,நீறு, திருநீறு.

=

தேங்காயுடைத்து அதன் நீரைச் சிந்தி முறியைப் படைப்பது, வழிபடுவோன் தன் தீவினை நினைந்து மனமுடைந்து கண்ணீர் சிந்தித் தூய்மைப்பட வேண்டு மென்பதையும்; வாழைப்பழத்தைப் படைப்பது, அதன் சதைபோல உள்ளம் கனிந்து மென்மையும் இனிமையும் பெற வேண்டுமென்பதையும், குறிப்பாக வுணர்த்தும்.

சிவன்கோவிற் பூசகர், குருக்கள், பண்டாரம், ஓதுவார், புலவர், போற்றி எனப் பல பெயர் பெற்றனர்.

மூவேந்தரும் முதற்கண் சிவனடியாரா யிருந்து, பின்னர் ஆரியர்(பிராமணர்) வந்து முத்திருமேனிக் கொள்கை புகுத்திய பின், இடையிடை ஒரோவொருவர் மாலியத்தையும்(வைணவத்தையும்) தழுவினர். தம்மைப் போன்றே தாம் வழிபடு தெய்வமும் ஏற்றமாக இருந்து இன்புற வேண்டுமென்று, தமக்குரிய சிறப்பை யெல்லாம் தம் தெய்வத்திற்கும் செய்தனர். அச் சிறப்புகள் தெய்வத்தின் ஒப்பிலா வுயர்வு நோக்கிப் பன்மடி யுயர்வாகச் செய்யப்பட்டன.

வானளாவும் எழுநிலைக் கூடகோபுரமும் மாடமண்டபங் களும் சுற்றுமதிலும் கொண்ட திருவுண்ணாழிகைத் திருக்கோவில், ஊர்வலத்திற்குச் சிறந்த யானை குதிரை யொட்டக வெண்காளை கள், குடை கொடி முதலிய சின்னங்கள், கருவூல களஞ்சிய பண்ட சாலைகள், பல்வகை அணிகங்கள்(வாகனங்கள்), சப்பரங்கள், விலையுயர்வும் ஓவிய வேலைப்பாட்டுச் சிறப்புமுள்ள பொன் னாடை பொன்மணியணிகள், திருக்குளம், பூங்கா, திருப்பள்ளி யெழுச்சி யின்னியம், திருமுழுக்காட்டு, திருவின்னமுது படைப்பு, திருநாள் ஆரவார ஊர்வல உலாக்கள், ஆண்டுதோறும் (முத்தட்டு முதல் எழு தட்டுவரை கொண்ட) தேரோட்ட தெப்பத் தேர்த் திருவிழாக்கள், நில மானியங்கள், இயவர், காவலர் ஏவலர் மேற் பார்வலராகிய பணிமக்கள் முதலிய பலவகைச் சிறப்பும் வேந்தரா லும் மன்னராலும் பெருஞ் செல்வராலும் செய்யப்பட்டன. இசை யாலும் நடத்தாலும் இறைவனை இன்புறுத்த நால்வகைப் பட்ட எல்லாக் கருவியிசையும் ஆட்டும் பாட்டும் கோவில்களிலும் திருவுலாக்களிலும் நிகழ்ந்தன. இதற்கென்றே பாடகரும் கணிகை யரும் நட்டுவரும் முட்டுவரும் அமர்த்தப்பட்டனர்.

கொண்முடிபு(சித்தாந்தம்)

தலைவன் தளையன் தளை என்னும் மூன்றும் தொடக்கமிலா முப்பொருள்கள். காமம்(காமியம்) வெகுளி(ஆணவம்) மயக்கம் (மாயை) எனத் தளை மூவகைத்து. தெரிந்தும் தெரியாமலும் செய்யும்