உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

திவ = வானம், நாள் (பகல்) வே.ஆ.

தமிழர் மதம்

திவன், திவஸ், திவஸ = நாள் (சமற்கிருதம்)

திவாகரன் = பகலைச் செய்பவன், பகலவன்.

தேவன் என்னும் தென்சொல், பிராகிருதத்தில் தேவ் என்றும், வேத ஆரியத்தில் தேவ என்றும் திரியும்.

பிருதுவி(ப்ருத்வீ)

-

நிலமகள், த்யாவா ப்ருத்வீ என்று வானத் தந்தையுடன் இணைத்து விளிக்கப்படுபவள். புடவி வ. ப்ருத்வீ.

அதிதி(Aditi)

66

-

'அதிதி என்பவள் ஒரு பெண்தேவதை. அவட்கு மித்திரன், வருணன் முதலிய எட்டுப் பிள்ளைகள் உளர். அவள் உலகத்திற் கெல்லாம் நன்மையளிக்கின்றாள் என்ற காரணத்தால் 'விச்வ ஜந்யா' எனக் கூறப்படுகிறாள். சுகத்தை அளிக்கவும் பாபத்தைப் போக்கவும் வேண்டப்படுகின்றாள்." (வ.நூ.வ.).

வருணன் (வருண)

இருக்கு வேதக் காலத்திற் சிறந்த தெய்வம் வருணனே. “அவரே பேரரசன். அவரது ஆணைப்படியே சூரியன் தன் வழியிற் சென்று பிரகாசிப்பான். சந்திரனும் நக்ஷத்திரங்களும் இரவிற் பிரகாசிக்கும்; நதிகள் ஒரே வகையாக ஓடும். ஜலத்திற்கு அரசன் அவரே. பறவைகள். கப்பல்கள் இவற்றின் கதியை அவரே அறிவர். பிறர் செய்த செயலையும் செய்யப் போகுஞ் செயலையும் அறிவர். பூமியையும் ஸுவர்லோகத் தையும் இடம் பிறழாதபடி செய்தனர். வேள்வி செய் வோனாலும் அவன் முன்னோராலும் செய்யப்பட்ட பாவத்தை நீக்குவர்" (வ.நூ.வ.) Gk.ouranos(heaven).

வாரணன் வ. வருண.

மித்திரன்(மித்ர)

-

மித்திரன் பகலை ஆள்பவனென்றும், வருணன் இரவை ஆள்பவனென்றும் வேத விளக்க வுரைஞர் சாயனர் கூறுவர். அக்கினி(அக்னி-Agni)

மண்ணுலகத் தெய்வங்களுள் தலைமையானவன் அக்கினி. அவன் வானுலகிற் கதிரவனாகவும், இடைவெளி யுலகில் மின்னாக வும், மண்ணுலகில் தீயாகவும் இருப்பன். வேள்விகளில், மேற்கும்