2
உறுப்பியல்
இதுகாறும் அரசன் இலக்கணங்களையும் கடமைகளையும் வினை செ-யும் முறைகளையும் கூறியவர், இனி அரசியலின் ஏழுறுப்புகளையும் 45 அதிகாரத்தால் கூறுமாறு எடுத்துக்கொண்டு, அவற்றுள் ஆட்சிக்கு இன்றியமையாத துணையும் அரசனுக்கு அடுத்தபடியாகச் சிறப்பு வா-ந்தவனுமான அமைச்சன் இயலையுஞ் செயலையும் பத்ததிகாரத்தாற் கூறத் தொடங்கி, முதற்கண் அமைச்சிலக்கணங் கூறுகின்றார்.
அதி. 64 - அமைச்சு
அதாவது, அமைச்சனின் இலக்கணமுங் கடமையும்.
631. கருவியுங் காலமுஞ் செ-கையுஞ் செ-யு
மருவினையு மாண்ட தமைச்சு.
(இ-ரை.) கருவியும் வினைக்கு வேண்டுங் கருவிகளும்; காலமும் அதற்கேற்ற காலமும்; செ-கையும் - அதைச் செ-யும் வகையும்; செ-யும் அருவினையும் – அவ்வகையிற் செ-யும் அரிய வினையும்; மாண்டது அமைச்சு - வெற்றிபெற எண்ணும் ஆற்றலிற் சிறந்தவனே அமைச்சனாவான்.
'கருவிகள்' படையும் படைக்கலமும் பொருளும் துணையும். 'காலம்' தொடங்கி முடிக்குங் காலங்கள். 'செ-கை' நால்வகை ஆம்புடையும் (உபாயமும்), தொடங்கும் வகையும், கையாளும் விரகும் (தந்திரமும்), இடையூறு நீக்கும் வழியும் ஆம். பெரும்பயன் தரும் சிறந்த வினை யென்பார் 'அருவினை' என்றார். 'அமைச்சு' சொல்லால் அஃறிணையாதலின் அத்திணைமுடிபு கொண்டது. இதே பின்னுங் கொள்க.