உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பொருட்பால் - உறுப்பியல் (குடி) - குடிமை

அதி. 96 - குடிமை

183

அதாவது, அரசனுடைய குடிகளுள் அறிவாலும் ஒழுக்கத்தாலும் உயர்ந்த சரவடியில் அல்லது குடும்பத்திற் பிறந்தாரது தன்மை. 'சிறப்புடைப் பொருளை முற்படக் கிளத்தல்' என்னும் முறைமையாலும், பிறருங் கண்டு பின்பற்றற் பொருட்டும், இது முன்வைக்கப்பட்டது.

"உயர்ந்த குடிப்பிறப்பு நால்வகை வருணத்தார்க்கும் இன்றியமையாத தாகலின், அச் சிறப்புப்பற்றி இது முன்வைக்கப்பட்டது" என்று வேண்டாதும் முரண்படவும் கூறியுள்ளார் பரிமேலழகர். ஆரியக் குலப்பாகுபாடு தமிழ்ப் பாகுபாட்டின் திரிப்பேயாயினும், நிறத்தை அடிப்படையாகக் கொண்டதும் ஏற்றத்தாழ் வுறுத்தப்பட்டது மாகும். ஆதலால் உயர்குடிப் பிறப்பு நாலாம் வருணத்தானான சூத்திரனுக்கு இருக்க முடியாது. தமிழ்க் குலப்பாகுபாடு கல்வி, காவல், வணிகம், உழவு என்னும் பரந்த தொழிற்பகுப்புப்பற்றிய அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நாற் பெரும்பால் அல்லது வகுப்பே யாகும். "வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்" என்று (புறம்.183) ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கூறியது இக் கருத்துப்பற்றியே.

“கீழ்ப்பா லொருவன் கற்பின்

மேற்பா லொருவனு மவன்கட் படுமே"

(புறம்.183)

என்று கூறியதும், செல்வத்தாலும் அதிகாரத்தாலும் உயர்ந்த அரசனும் அவற் றில் தாழ்ந்த அல்லது அவையில்லாத வேளாளன் அல்லது தொழிலாளி மகனான புலவனிடம் அல்லது ஆசிரியனிடம் கற்பதுபற்றியே. "தோணி இயக்குவான்" என்னும் நாலடியார்ச் செ-யுளையும் (136) நோக்குக.

951.

இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை யியல்பாகச் செப்பமு நாணு மொருங்கு.

(இ-ரை.) செப்பமும் நாணும் ஒருங்கு - ஒழுக்க நேர்மையும் பழிக்கு நாணுதலும் ஒருசேர; இல் பிறந்தார்கண் அல்லது இயல்பாக இல்லை குடிப்பிறந்தாரிடத் தல்லது பிறரிடத்து இயற்கையாக வாகா.

இங்கு இல் என்றது சேக்கிழார் குடிபோலுஞ் சரவடியை அல்லது சேர சோழபாண்டியர் குடிபோலுங் கொடிவழியை.

"நாடும் ஊரும் இல்லும் குடியும்

பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி"

(தொல். களவு. 23)