உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பொருட்பால் உறுப்பியல் (குடி) - குடிமை

954. அடுக்கிய கோடி பெறினுங் குடிப்பிறந்தார் குன்றுவ செ-த லிலர்.

185

-ரை) குடிப்பிறந்தார் - உயர்குடிப் பிறந்தவர்; அடுக்கிய கோடி பெறி னும் - பலவாக அடுக்கிய கோடிக்கணக்கான பொன்னைப் பெறுவதாயிருப் பினும்;

குன்றுவ செ-தல் செ-தல் இலர் இழிசெயல்களைச் செ-யார்.

தம் ஒழுக்கங் குன்றுவதற் கேதுவான

செல்வம் பொதுவாகக் காசளவில் மதிக்கப்படுவதனாலும், நன் கொடையாகவுங் கையூட்டாகவுங் கொடுக்கப்பெறுவது பெரும்பாலுங் காசேயாதலாலும், காசுகளில் உயர்ந்தது பொற்காசாதலாலும், இங்குக் கோடி என்பதற்குக் கோடிப் பொன் என்று உரைக்கப்பட்டது. பொன் என்றது உயர்ந்த பொற்காசை. 'கோடி', 'பொன்' என்பன ஆகுபெயர்கள். 'அடுக்கிய கோடி’ என்று பொதுப்படச் சொன்னதனால், தாமரை (கோடாகோடி), சங்கம் (பத்துக் கோடாகோடி, பரதம் (இலக்கங் கோடிக் கோடாகோடி) முதலிய மாபேரெண் களெல்லாம் தழுவப்பெறும். உம்மை உயர்வுசிறப்போடு கூடிய எச்சம்.

955.

வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பின் றலைப்பிரித லின்று.

(இ-ரை.) பழங்குடி - தொன்றுதொட்டு வருகின்ற நற்குடியிற் பிறந்தார்; வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் - தாம் கொடுக்கும் பொருள் சுருங்கிப் போன விடத்தும்; பண்பின் தலைப்பிரிதல் இன்று தம் கொடுக்குந் தன்மை யினின்று நீங்குதல் இல்லை.

-

கொடைத்தன்மை தலைமுறைதோறும் ஆழ வேரூன்றுதலால், பழங் குடிக்கு அது நீங்காத பிறவிக் குணமாப் போ-விடுமென்பது கருத்து. உம்மை இறந்தது தழுவிய எச்சம். “தொன்றுதொட்டு வருதல் சேரசோழ பாண்டிய ரென்றாற்போலப் படைப்புக்காலந் தொடங்கி மேம்பட்டு வருதல்" என்று பரிமேலழகர் உரைத்திருப்பது பாராட்டத்தக்கது.

956.

"ஆற்றுப் பெருக்கற் றடிசுடு மந்நாளும்

ஊற்றுப் பெருக்கா லுலகூட்டும் - ஏற்றதொரு

நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தா ரானாலும்

இல்லையென மாட்டா ரிசைந்து.”

"

சலம்பற்றிச் சால்பில செ-யார்மா சற்ற குலம்பற்றி வாழ்துமென் பார்.

(நல்வழி, 9)