உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

திருக்குறள்

தமிழ் மரபுரை

தெளிவாக அறிந்தவராதலின் 'நடுக்கற்ற காட்சியவர்' என்றும், 'இளிவந்த செ-யார்' என்றும் கூறினார்.

655. எற்றென் றிரங்குவ செ-யற்க செ-வானேன்
மற்றன்ன செ-யாமை நன்று.

(இ-ரை) எற்று என்று இரங்குவ செ-யற்க – ஐயோ! எத்தன்மையான தவற்றை எண்ணாது செ-துவிட்டேன் என்று பின்பு வருந்துவதற் கேதுவான வினைகளை ஒருபோதுஞ் செ-யாதிருக்க; செ-வானேல் - ஒருகால் தப்பித் தவறிச் செ-ய நேர்ந்துவிடின்; மற்று அன்ன செ-யாமை நன்று - அதன் பின்பாகிலும் அத்தகைய வினைகளைச் செ-யாதிருப்பது நல்லது.

தவறு செ-வது மாந்தன் இயற்கையே. ஆயின், ஒரு முறை தவறிய பின் திருந்திவிடல் வேண்டும். மறுமுறையும் அதே தவறு செ-வது பகுத்தறிவுள்ள மாந்தன் இயல்பிற்கு ஏற்காது. இதையே 'மற்றன்ன செ-யாமை நன்று' என்பதாற் குறித்தார்.

"துணியப்பட்ட தென்று பின் இரங்கப்படும் வினையைப் செ-யா தொழிக; வினை செ-வான் ஆயின், அவை போல்வனவும் செ-யாமையே நல்லது" என்னும் மணக்குடவர் உரை பொருந்துவதே.

பரிமேலழகர் பின்னடிக்குப் பின்னிருந்து அவ் விரங்கல்களைச் செ-யாதொழிதல் நன்று" என்று பொருள் கூறி, "பிற்றொடருக்குச் செ- வானாயின் அவை போல்வனவுஞ் செ-யாமை நன்றெனப் பிறரெல்லாம் இயைபற வுரைத்தார்" என்று பழித்தார். 'எற்றென் றிரங்குவ' என்பதே பின்னிரங்குவதை எதிர்நோக்கலால், இரங்காமை நன்றென்பது மூலத்தொடு முரண்படுவதென அறிக. என்னது - எற்று (என் + து).

656. ஈன்றாள் பசிகாண்பா னாயினுஞ் செ-யற்க
சான்றோர் பழிக்கும் வினை.

(இ-ரை.) ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் - தன்னைப் பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்தும் வறியனாயினும்; சான்றோர் பழிக்கும் வினை செ-யற்க - அத் தாயின் பசியைத் தணித்தற்பொருட்டு அறிவுடையோர் பழிக்கும் வினைகளை ஒருவன் செ-யாதொழிக.

"ஈன்றாளின் என்ன கடவுளும்,"

(54)

என்பது நான்மணிக்கடிகை.