(இ-ரை.) துன்பம் உறவரினும் - வினைசெ-யுங்கால் தமக்குத் துன்பம் மிகுதியாக வருமாயினும்; இன்பம் பயக்கும் வினை துணிவு ஆற்றிச் செ-க - அதுபற்றித் தளராமல் முடிவில் இன்பந்தரும் வினையை மனத்திண்மையுடன் செ-க.
துன்பம் வருங்காலம் குறிக்கப்படாமையின் வினையின் முதலிடை கடையில் மட்டுமன்றி முழுமையுந் துன்பம் வரினும் பொறுக்க வேண்டு மென்பதாம். பிள்ளை பெறுபவளின் துன்பம் பிள்ளை பெற்ற பேற்றால் இன்பமாக மாறுவதுபோல், முயற்சித் துன்பமும் வெற்றிப் பேற்றால் இன்பமாக மாறுமென்பார், 'இன்பம் பயக்கும் வினை' என்றார். 'உற' உரிச்சொல்.
670. எனைத்திட்ப மெ-தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டா துலகு.
(இ-ரை) வினைத்திட்பம் வேண்டாரை - வினை செ-வதில் உறுதியை விரும்பாத அமைச்சரை; எனைத்திட்பம் எ-தியக் கண்ணும் - வேறு எத்தகைய உறுதியுடையவரா யிருப்பினும்; உலகு வேண்டாது - உயர்ந்தோர் விரும்பார்.
மனத்திண்மை, மதித்திண்மை, அறிவுத்திண்மை, உடல்திண்மை, வினைத்திண்மை என அகத்திண்மை பலவகைப்படும். கருவித்திண்மை, இடத்திண்மை, காலத்திண்மை, படைத்திண்மை முதலியன புறத்திண்மையாம். இவையெல்லா மிருந்தும் மெ-ம்முயற்சியாகிய வினைத்திண்மை யில்லாவிடத்துப் பயன்படாமையின், 'வினைத்திட்பம் வேண்டாரை வேண்டா துலகு' என்றார். 'உலகு' ஆகுபெயர்.
அதி. 68 - வினைசெயல்வகை
அதாவது, வினைத்திண்மையுடைய அமைச்சன் வினை செ-யும் வகை. அதிகார முறையும் இதனால் விளங்கும்.
671. சூழ்ச்சி முடிவு துணிவெ-த லத்துணிவு
தாழ்ச்சியுட் டங்குத றீது.
(இ-ரை.) சூழ்ச்சி முடிவு துணிவு எ-தல் - ஒன்றைப்பற்றி ஆரா-ந் தெண்ணுவதன் இறுதியாவது, இதை இன்னவாறு செ-ய வேண்டும் என்னும் தீர்மானத்தைக் கொள்ளுதலே; அத் துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது – அத் தீர்மானத்தை உடனே நிறைவேற்றாது காலங் கடத்துவது குற்றமாகும்.