கையாள வேண்டிய வழிவகை. அதை அறியவே, தானும் அவ்வாறு செ-து வெற்றி பெறுவன் என்பதாம். இம் முக்குறளாலும் ஒத்தோன் வினைசெ-யுந் திறங் கூறப்பட்டது.
678. வினையான் வினையாக்கிக் கோட னனைகவுள்
யானையால் யானையாத் தற்று.
(இ-ரை.) வினையால் வினை ஆக்கிக் கோடல் – ஒரு வினையைச் செ-யும் பொழுதே அதனால் வேறுமொரு வினையை முடித்துக் கொள்ளுதல்; நனைகவுள் யானையால் யானை யாத்த அற்று – மதத்தால் நனைந்த கன்னத்தையுடைய யானையால் வேறுமொரு யானையைப் பிடித்துக் கட்டிய தொக்கும்.
உவமம் பெருவினை எளிதில் முடிவதைக் காட்டும். 'நனைகவுள்' என்பது 'வினையால்' என்பதற்கு எதுகையாகவே வந்ததனால், 'நனைகவுள் யானை' என்பது களிறு என்னும் அளவா- நின்றது. அல்லாக்கால், மதயானை பெண்யானையாலன்றி ஒருவகையிலும் அடக்கப்படாததாயும் ஒரு வினைக்கும் பயன்படாததாயும் இருக்குமாதலின் 'யானையால் யானை யாத்தற்று' என்னும் உவமை பொருந்தாதென்க. ஒரு கல்லில் இரு குருவியை வீழ்த்துவதும், ஒரு குண்டில் இரு புறாவைச் சுடுவதும் போல், ஒரு முயற்சியால் இருவினையை முடிக்கும்வகை இதனாற் சொல்லப்பட்டது. அதற்கேற்ப எண்ணிச் செ-க என்பது கருத்து.
679. நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
யொட்டாரை யொட்டிக் கொளல்.
(இ-ரை.) ஒட்டாரை ஒட்டிக் கொளல் - வினை தொடங்குமுன் தன் பகைவரொடு பொருந்தாதவரைத் தனக்கு நட்பாக்கிக் கொள்ளுதல்; நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே – தன் நண்பருக்கு இனியன செ-தலினும் விரைந்து செ-யப்பட வேண்டியதே.
உண்மையானவரும் பழகியவருமான நண்பர் தன்னை விட்டு நீங்கா ராதலானும், அவருக்குச் செ-ய வேண்டிய சிறப்பைச் சற்றுக் காலந்தாழ்த்துச் செ-யினும் பொறுத்திருப்பராதலானும், பகைவருடன் பொருந்தாதவரை உடனே தன்னொடு சேர்த்துக்கொள்ளாவிடின் பகைவர் அவர் விரும்பியதைக் கொடுத்துத் தம்வயப்படுத்திக் கொள்வராதலானும், 'நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே' என்றார். இனி, இதுவரை தன்னொடு ஒட்டாரை