உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

44

திருக்குறள்

தமிழ் மரபுரை


ஆட்சி வழக்கிலும், செஞ்சொல் ஆகுபொருட்சொல் குறிப்புச் சொல் என்னும் மூவகைச் சொல்லும், முறையே, செம்பொருளும் ஆகுபொருளும் குறிப்புப் பொருளும் உணர்த்தும் முறை. இடைதெரிதலாவது ஊண் வேளையும் உறக்க வேளையும் நீண்டநேரம் கேட்டுச் சலித்த வேளையும் வேறோர் இடத்திற்குச் செல்லும் வேளையும் அறிதலாம், நன்கு உணர்ந்து சொல்லுதலாவது அவையினர்க்கு விருப்பமான பொருளை இனிதாகவும் சுருக்கமாகவும் விளக்கமாகவுஞ் சொல்லுதல்.

713. அவையறியார் சொல்லன்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉ மில்.

(இ-ரை.) அவை அறியார் சொல்லல் மேற்கொள்பவர் - தாம் பேசும் அவையின் திறத்தை யறியாது அதன் முன் ஒன்று சொல்லுதலை ஏற்றுக் கொண்டவர்; சொல்லின் வகை அறியார் - சொல்லுதலின் கூறுபாட்டை அறியாதவராவர்; வல்லதும் இல் - அதோடு, அவர் கற்றுத் தேர்ந்த கலையும் அவர் கல்லாததாகக் கருதப்படும்.

கற்றோரவையில் உயர்ந்த நடையில் உயர்ந்த பொருள்பற்றியும், கல்லாரவையில் எளிய நடையில் எளிய பொருள்பற்றியும், பேசினாலன்றிச் சொற்பொழிவாற் பயனின்மையின், 'சொல்லின் வகையறியார்' என்றும்; அவைக்கு ஏற்காதவாறு பேசுவாரைப்பற்றி "இதையறியாதவர் வேறு எதையும் அறியார்" என்னும் கருத்துண்டாதலின், "வல்லதூஉம் இல்" என்றும் கூறி னார். 'சொல்லின் வகையாவது,

"உரைக்கப் படும்பொருள் உள்ளத் தமைத்து
விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து

கொள்வோன் கொள்வகை யறிந்தவ னுளங்கொளச்"

(நன்.பொதுப்.36)

சொல்லுதல். வல்லதூஉம்' இன்னிசை யளபெடை.

714. ஒளியார்முன் னொள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணங் கொளல்.

(இ-ரை.) ஒளியார் முன் ஒள்ளியர் ஆதல் - அறிவால் விளங்குவார் முன் தாமும் அறிவுச்சுடராக விளங்குக; வெளியார் முன் வான்சுதை வண்ணம் கொளல் - அறிவில்லாத வெள்ளைகள் முன் வெள்ளையான சுண்ணச் சாந்தின் நிறத்தைக் கொள்க.