உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

62

திருக்குறள்

தமிழ் மரபுரை


கொண்டது மதிலரணையே. இதை, 'உடையது அரண்' என்று மணிநீர் முதலிய நான்கையும் அரணுறுப்பாகச் சொல்லியிப்பதனாலும், அடுத்த குறளாலும் அறிக.

அகழிநீர் ஆழமாகவும் என்றும் வற்றாததாகவும் இருந்து கடல்நீரின் நிறத்தைக் கொண்டிருக்குமாதலால் 'மணிநீர்' என்றார். மணி என்பது தொண்வகை ஒளிக்கற்கட்கும் பொதுப்பெயராயினும் சிறப்பாக நீலமணியைக் குறிப்பதை மணிமிடற்றோன்(சிவன்), மணிவண்ணன்(திருமால்) முதலிய பெயர்களால் அறிக.

அகழியையடுத்து வெள்ளிடை நிலம் இருப்பது பகைவர் வந்ததை அறிதற் பொருட்டும், அவர்மீது மதில்மிசை மறவர் அம்பெ-தற் பொருட்டும். அதையடுத்த 'அணிநிழற்காடு' பகைவர் தனித்தனியாக வன்றிப் படையாகத் திரண்டு வருவதைத் தடுத்தற்பொருட்டும், பகைவரின் வரவு பார்க்கும் காவல் மறவர் துன்பமின்றிக் காத்தற்பொருட்டும். இக் காடே மிளை யென்றும் காவற்காடென்றும் பெயர் பெறுவது. முல்லைக்கு அப்பாற்பட்டதே. குறிஞ்சி, செ-யுளிற் கூழை மோனை நோக்கி 'மலை' முன்னின்றது. மலை நெ-தலல்லாத் திசையில் நீண்டகன் றுயர்ந்திருப்பன. இவை மேலிருந்து காவல் செ-யவும், கணவா-களின் வழிவரும் பகைவரைத் தடுக்கவும் கொல்லவும் உதவுவன. வெறுநிலத்தை மருநில மென்றார் பரிமேலழகர். மரு என்பது மணல்வெளியையும் பாலை நிலத்தையுங் குறிக்கும் வடசொல் லாதலின், இவ் விடத்திற்குப் பொருந்தாது.

743. உயர்வகலந் திண்மை யருமையிந் நான்கி
னமைவர ணென்றுரைக்கு நூல்.

(இ-ரை.) உயர்வு அகலம் திண்மை அருமை - உயர்ச்சியும் அகலமும் திணுக்கமும் அருமையும்; இந் நான்கின் அமைவு - ஆகிய இந் நான்கு திறமும் அமைந்திருப்பதே; அரண் என்று நூல் உரைக்கும் - சிறந்த மதிலரண் என்று அரசியல்பற்றிய பொருள்நூல் கூறும்.

பாம்புரியோடு கூடிய கோட்டைமதில் அகழியை அடுத்த தென்பதை,

"கார்முற்றி யிணரூழ்த்த கமழ்தோட்ட மலர்வே-ந்து
சீர்முற்றிப் புலவர்வா-ச் சிறப்பெ-தி யிருநிலந் தார்முற்றியதுபோலத் தகைபூத்த வையைதன்
னீர்மூற்றி மதில்பொரூஉம் பகையல்லா னேராதார்

போர்முற்றொன் றறியாத புரிசைசூழ் புனலூரன்"

(கலித்.67)

என்பதனாலும்,