தறுகண்மையாவது சாவிற்கும் கொடிய நோவிற்கும் சிறிதும் அஞ்சாமை. மறம் முதலிய நான்கினாலும், முறையே பகைவரைத் தப்பாது வெல்லுதலும், தமக்கும் தம் அரசனுக்குந் தாழ்வு வராமற் காத்தலும், தோற்றோடுவார்மீது படைக்கலந் தொடுதலும் பெண்டிர் கற்பழித்தலும் அரசனது ஏவலின்றிக் கொள்ளையடித்தலும் செ-யாமையும், அறை போகாமையும் பெறப்பட்டன. அரண்போற் பாதுகாப்புச் செ-யும் பண்புகளை அரணென்றார்.
767. தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்குந் தன்மை யறிந்து.
(இ-ரை.) தலைவந்த போர் தாங்கும் தன்மை அறிந்து - பகைவரால் வகுக்கப்பட்டுத் தன்மேல் வந்த படையின் போரை விலக்கும் வகையறிந்து, அதற்கேற்பத் தன்னை வகுத்துக்கொண்டு; தார் தாங்கிச் செல்வது - பகைவர் தூசிப்படையைத் தன்மேல் வராமல் தடுத்துத் தான் அதன்மேற் சென்று தாக்குவதே; தானை - சிறந்த படையாவது.
படைவகுப்பு இடத்திற்கேற்பத் தண்டம், மண்டலம், சக்கரம், சகடம் (தேர்), தாமரை முதலிய பல்வேறு வடிவில் அமைக்கப் பெறுவதாகும். படையுறுப்புகள் நெற்றி, தார் (தூசி), கை, பேரணி, கூழை என ஐந்தாம்.
"தூசியுங் கூழையு நெற்றியுங் கையும்
(403)
(404)
(405)
என்பன பிங்கலம். நெற்றியென்பது தாரின் முற்பகுதியும், கை என்பது படை வகுப்பின் இருபக்கமும், கூழையென்பது பேரணியின் பிற்பகுதியும், போலும்!
"படை வகுப்பாவது வியூகம், அஃது எழுவகை யுறுப்பிற்றா-, வகையா னான்கா-, விரியான் முப்பதாம். உறுப்பேழாவன உரமுதற் கோடியீறாயின. வகை நான்காவன தண்டம், மண்டலம், அசங்கதம், போக மென விவை. விரிமுப்பதாவன தண்டவிரி பதினேழும், மண்டலவிரி இரண்டும், அசங்கதவிரி யாறும், போகவிரி ஐந்துமென விவை. இவற்றின் பெயர் களும் இலக்கணமும் ஈண்டுரைப்பிற் பெருகும். அவையெல்லாம் வடநூல் களுட் கண்டு கொள்க" என்று பரிமேலழகர், பண்டைத் தமிழ் மறநூல்கள்