88
திருக்குறள்
தமிழ் மரபுரை
உண்மை நட்பு உதவி பெறாதும் தோன்றுமாதலானும், "அவற்றுள், இயற்கை பிறப்புமுறையா னாயதூஉம் தேயமுறையா னாயதூஉமென இருவகைப் படும். அவற்றுள் முன்னையது சுற்றமாகலின் அது சுற்றந்தழாலி னடங்கிற்று; ஏனையது பகையிடையிட்ட தேயத்ததாகலின், அது துணைவலியென வலியறிதலு ளடங்கிற்று.இனி, ஈண்டுச் சொல்லப்படுவது முன்செ-த வுதவிபற்றி வருஞ் செயற்கையாகலின், அதன் சிறப்பு இதனாற் கூறப்பட்டது" என்று பரிமேலழகர் உரைத்திருப்பது பொருந்தாமை காண்க. 'அரிய' இரண்டனுள், முன்னது எளிதா- இயலாமையையும், பின்னது பெருஞ் சிறப்பையும், உணர்த்தின.
782. நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.
(இ-ரை.) நீரவர் கேண்மை பிறை நிறை நீர - அறிவுடைய மேலோர் நட்புகள் வளர்பிறைத் தன்மையுடையனவா- மேன்மேலும் வளர்ந்து வரு வனவாம்; பேதையார் நட்பு மதிப்பின் நீர - அறிவில்லாக் கீழோர் நட்புகள் தே-பிறைத் தன்மையுடையனவா- வரவரத் தே-ந்து வருவனவாம்.
நீர்மையுடையார் நீரவர். நீர்மை சிறந்த தன்மை, "நீர்மை யுடையார் சொலின்" (குறள். 195) என்பதிற்போல. நட்பைக் 'கேண்மை' யென்றதினால், அது இனவுறவுபோற் சிறந்ததென்பது பெறப்படும். மேலோர் நட்பு வரவர வளர்தற்கும் கீழோர் நட்பு வரவரத் தளர்தற்கும், அவரிடத்திற் பண்பாடு உண்மையும் இன்மையுமே கரணியம். 'நட்பு' ஈரிடத்தும் பால்பகா வஃறிணைப் பெயர். நட்டார் பன்மையால் நட்பும் பலவாயின.
783. நவிறொறு நூனயம் போலும் பயிறொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
(இ-ரை.) பண்பு உடையாளர் தொடர்பு - பண்பட்ட மேலோர் தம்முட் செ-யும் நட்பு: பயில்தொறும் - பழகப்பழக; நூல் நவில்தொறும் நயம் போலும் - சிறந்த நூல் கற்கக் கற்கக் கற்றார்க்கு இன்பந்தருவதுபோல் இன்பஞ் செ-வதாம்.
நயத்தல் விரும்புதல் அல்லது மகிழ்தல். நயக்கப்படுவது நயமெனப் பட்டது. மேன்மேல் வளரும் நட்பின் தன்மை இங்குக் கூறப்பட்டது.
784. நகுதற் பொருட்டன்று நட்டன் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு.