உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




108

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

தவிர ஏனை நிலைமைகளிலெல்லாம், தகுதி (merit) யொன்றையே கவனித்தல் வேண்டும்.

3. கலப்பு மணத்தை ஊக்குவிப்பு

வேலையளிப்பு, சம்பளவுயர்வு, எளிய வட்டி மெள்ள மீட்புக் கடன் கொடுப்பு, இலவச மருத்துவம், பிறக்கும் பிள்ளை கட்கு இலவசக் கல்வியும் வேலையளிப்பும் முதலிய சிறப்புச் சலுகைகள் கலப்புமண மக்கட்குக் கொடுக்கத்தகும்.

மணமக்கள் குலங்களின் ஏற்றத் தாழ்விற்குத் தக்கவாறு, சலுகைகளின் அளவு அமைதல் வேண்டும்.

மணமக்கள் எளியவராயின் திருமணச் செலவிற் பாதியும், வெறுங் கையராயின் முழுமையும், அரசு ஏற்றுக்கொள்ளலாம்.

பத்திற்கு மேற்பட்ட தொகுதித் திருமணங்களாயின், ஆள்நரே அல்லது அமைச்சரே தலைமைதாங்கி அரசினர் கூட்டியத்தையும் (Band) உதவி நடத்திவைக்கலாம்.

மிக நெருங்கிய குலத்தா ரெல்லாம் முதற்கண் ஒன்று சேர்தல் வேண்டும். முக்குலத்தார் இவ்வகையில் முன்னேறிச் செல்வது போற்றத்தக்கது.

4. தொழிலடிப்படையிற் குடிமதிப்பு (Census)

5. விடுதிகளும் உண்டிச்சாலைகளும் தங்கல் மனைகளும் மண மண்டபங்களும் குலஅடிப்படையிலிராமை

6. குல வேறுபாட்டிற்குக் கரணியமான வீண்சடங்கு விலக்கம் 7. இயன்றவரை புலாலுணவு நீக்கம்

ஊனுணவும் ஊனுணவு

வகைகளும்

இந்தியருள்,

சிறப்பாகத் தமிழருள், பேரளவு பிரிவினை யுண்டுபண்ணு கின்றன.

8. அரசினர் பொது விருந்துகளி லெல்லாம் சமையலையும் பரி மாறலையும் ஒரே குலத்தாரிடம் ஒப்படையாமை

துப்புரவு, ஒழுக்கம், நாகரிகம், கல்வி என்னும் நான்கே குலவுயர்விற்கு அடிப்படையாயிருத்தல் வேண்டும். சிவவூண் வெள்ளாளர் போன்றவ ரெல்லாம் துப்புரவாளரே. அவர் சமைத்ததை அனைவரும் உண்ணலாம். அதை எவரேனும் உண்ண மறுப்பின், அரசு பொருட்படுத்தல் கூடாது.