உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்நாட்டு அரசின் தனிக்கடமை

143

பெற்றதாக மகிழும், பறைசாற்றும். ஆயின், தமிழ்நாடோ, இவற்றிலெல்லாம் முரண்பட்டுத் தனித்து நிற்கும்.

தென்மொழியினத்திற்குரிய சிறப்பிலக்கியமும் வரலாற் றுச் சான்றும் தமிழிலேயே இருப்பதால், திரவிட மொழிகளி னின்றும் தமிழ் வேறு பிரிந்து நிற்கும். ஆதலால், ஆட்சித் துறையில் காசுமீர நாட்டிற்குத் தனிச் சலுகை காட்டி யிருப்பது போன்று, மொழித் துறையில் தமிழ்நாட்டிற்குத் தனித்திட்டம் வகுத்தல் வேண்டும்.

திரவிடமொழிகளில் வடசொல் சேரச் சேரச் சிறப்பாம். தமிழில் அது தீரத் தீரச் சிறப்பாகும். ஆகாசவாணி, வனமகோற் சவம் என்னும் பெயர்களைத் திரவிடமொழிகள் அங்ஙனமே வழங்கும். தமிழ் அவற்றை வானொலி, நட்டுவிழா என்று மொழிபெயர்த்து வழங்கும்.

மர

திரவிட மொழிகள் போன்றே தமிழையுங் கருதிக் கொண்டு, வடசொல் துணையின்றித் தமிழ் தனித்து வழங்கா தென்பர், தமிழ்ப் பற்றும் ஆராய்ச்சியுமில்லார். தமிழ் வடசொல் துணையின்றித் தனித்து வழங்குவது மட்டுமன்றித் தழைத் தோங்கவுஞ் செய்யும் என்று கால்டுவெலார் கூறியிருப்பதைக் காண்க.

னி, ஆரிய மொழிகளிலுள்ள சுட்டுச் சுட்டுச்சொற்களு ம் நூற்றுக்கணக்கான அடிப்படைத் திரிசொற்களும் நூற்றுக் கணக்கான வேர்ச்சொற்களும் தமிழாகவே யிருப்பதால், உண்மையில் வடமொழியே தமிழ்த்துணையின்றித் தனித்து வழங்க இயலா தென்பதை அறிதல் வேண்டும். ஆகவே, குமரி நாட்டுத் தமிழ் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமு மாகும். இங்ஙனம், உலகில் ஒப்புயர்வற்ற தலைமைபெற்ற தமிழ் வழங்கும் நாட்டிற்கு, மொழித்துறையில் தனித் திட்டம் வகுப்ப தென்பது, தமிழ்ப்பகை வரும் மறுக்கொணாத் தகுதியுரிமையாம்.

இந்தி புகுத்தப்பட்ட வகை

பகரமாக

இந்திய விடுதலைப் போராட்டத்தின் இறுதிக் காலத்தில், காந்தியடிகள், ஆங்கிலத்திற்குப் இந்துத்தானியை இந்தியப் பொதுமொழியாக்கின், இந்து- முசிலீம் ஒற்றுமையும் இந்திய வொற்றுமையும் ஒருங்கே யுண்டாகுமென்று கருதினார். அதுவே இந்தியை இந்தியப்