உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்நாட்டு அரசின் தனிக்கடமை

145

இத்தகைய மொழித்தீர்மானக் குழுவில், மறைமலை யடிகளும் சோமசுந்தர பாரதியாரும் போன்ற தமிழறிஞரைச் சேர்த்திருத்தல் வேண்டும். ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு வரையே உறுப்பாக அமைத்திருத்தலும் வேண்டும். குழுத் தலைவர் நடுநிலை பேணியிருத்தலும் வேண்டும். இம் மூன்று

நெறிமுறைகளும்

புறக்கணிக்கப்பட்டன.

தேய முழுதும் மயங்கியிருந்த காலத்தில், அற்றம் பார்த்துக் கவரும் கள்வன் போல, இந்தியார் இந்திக்கு ஆக்கந் தேடிக்கொண்டனர்.

3. இந்தியெதிர்ப்புப் போராட்டம்

1937ஆம் ஆண்டு, சென்னை மண்டல முதலமைச்சரான ச.இராசகோபாலாச்சாரியாரால் தமிழ்நாட்டு 200 உயர் பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாகப் புகுத்தப்பட்டது.

திருவள்ளுவருக்குப்பின் தோன்றிய தமிழ் காவலருள் தலைமையானவரும், ஈடிணையற்ற மும்மொழிப் புலவரும், தனித்தமிழைப் புதுப்பித்த தாளாளரும், இருபதாம் நூற்றாண் டுத் தலைமைத் தமிழதிகாரியுமான மறைமலை யடிகள் 'இந்தி பொது மொழியா?' என்னும் இந்தியெதிர்ப்பு மணிநூலை எழுதி வெளியிட்டார்.

இந்தியெதிர்ப்புக் கூட்டங்கள், ஊர்வலங்கள், கால் நடைச் செலவுகள், மாநாடுகள், மறியல்கள், துண்டு வெளியீடுகள், சுவரொட்டிகள், செய்தித்தாள் திருமுகங்கள், மாதிகைக் கட்டுரைகள், சுவடிகள், பாடல்கள், இலக்கக் கணக்கான கையெழுத்துப் பட்டியல் விடுப்புகள், குறிப்புப் படங்கள், சின்னக்குறியணிவுகள், இந்திப் பெயர்ப் பலகைக் கரிநெய்ப் பூச்சுகள், இந்தியரக்கிச் சூந்தெரிப்புகள் ஆகியவை தமிழ் நாடெங்கணும் தொடர்ந்து நடைபெற்றன.

பெயர்பெற்ற வழக்கறிஞரும் தலையாய தமிழ்ப் பேரா சிரியருமான கா. சுப்பிரமணியப் பிள்ளையும் நாவலர் சோம சுந்தர பாரதியாரும் போராட்டத்தில் இறங்கினர். தமிழரத்தந் துடித்த தமிழ்ப் புலவரும் துறவியரும் போராட்டத்திற் கலந்து கொண்டனர்.

ஈ.வெ.ரா.பெரியாரும் புலவரும் உள்ளிட்ட ஆயிரக் கணக்கான தொண்டர் சிறைசென்றனர்.

ஆயினும் கட்டாய இந்திப் பாடம் நீக்கப்படவில்லை. அதற்குக் கரணியங்கள் வருமாறு: