உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்நாட்டு அரசின் தனிக்கடமை

147

புகுத்தி, அதை மறைக்கத் திருவள்ளுவர் திருநாளை ஏற்படுத்தினார். அவருக்குப்பின், திரு. சி. சுப்பிரமணியனார் கல்வியமைச் சரான போது எஞ்சிய பள்ளிகளிலும் இந்தி புகுத்தப்பட்டு விட்டது.

இந்திய அரசியலமைப்பின்படி, 1965ஆம் ஆண்டு சுறவம் 13ஆம் பக்கல் (சனுவரி 26) இந்தி அனைத்திந்திய ஆட்சி மொழி யாயிற்று. அதன் விளைவான தமிழ்நாட்டு இந்தியெதிர்ப் பில், மதுரை மாணவர் ஓரிருவர்

கை

வட்டுண்டது; அண்ணா மலைப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சுட்டுக் சுட்டுக் கொல்லப்பட் டார்; டார்; பொதுமக்களுட் பதின்மர், தம் மனநோவைப் பொறுக் கலாற்றாது கன்னெய் (petrol) வார்த்துத் தம்மை எரித்துக் கொண்டனர். அதன்பின்பும் முதலமைச்சர் பத்தவச்சலனார் மனம்

மாறவில்லை.

தமிழ்நாட்டில் முதன்முதலாக இந்தியைப் புகுத்தின நாவன் மணி(பாரத ரத்தினம்) ச. இராசகோபாலாச்சாரியாரே பல்லாண்டிற்குப்பின் தம் தவற்றை யுணர்ந்து, ஆங்கிலமே இந்தியப் பொது மொழியாயிருத்தல் வேண்டுமென் கிளர்ச்சி செய்தார். அதன் பயனாக, இந்தி பேசாத நாட்டார் விரும்புங் காலமுழுதும் ஆங்கிலமும் இந்தியத் துணையாட்சி மொழி யாயிருக்கலாமென்று நேரு உறுதி மொழி பிறந்தது. அதனால் தமிழருக்கு ஒரு நன்மையு மில்லை. அது இன்று சாகிறவன் நாளைச் சாகட்டும் என்று சொல்வ தொத்ததே.

1967-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றுத் தமிழ்நாட்டு ஆட்சியேற்றது. ஆயினும், திரு. அண்ணா துரையார் உடனடியாய் இந்திக் கட்டாயத்தை நீக்கவில்லை. கோவை வேளாண்மைக் கல்லூரி மாணவரும் பொறிவினைக் கல்லூரி மாணவருங் கூடி, இந்திய அரசியற் கொடியை எரித்துத் தமிழ்நாட்டுப் பிரிவினைக் கிளர்ச்சியைத் தாடங்கி விட்டதனால், முதலமைச்சர்

திரு.

அண்ணாதுரையார் விரைந்து சட்டசவையைக் கூட்டி இந்திக் கட்டாயத்தை நீக்கினார்.

பேராயக் கட்சித் தமிழர் இன்னும் தம் பிழையை உணர வில்லை. பொதுவுடைமை யென்னும் கூட்டுடைமைக் கட்சித் தமிழர்க்கோ, வயிற்றுப் பற்றன்றி வேறொரு பற்றுமில்லை. இதனால் தமிழ்நாட்டிற்கு இந்தித் தொல்லை நீங்கிய ல்லை. வேலி கட்டிய ஆட்டுக் கிடைக்குட் புக ஓநாய்

பாடி