உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்நாட்டு அரசின் தனிக்கடமை

149

சொல்வகையில், இந்தியினும் தமிழுக்கு நெருக்கமானது

ஆங்கிலமே.

ஓர்

டி,

ஆங்கிலம் அறிவியன் மொழியாதலால், இந்தியரனை வர்க்கு வர்க்கும் அறிவு புகட்டி, காந்தியடிகளும் நேருவும் போன்ற தேசத் தொண்டரையும் தலைவரையுந் தோற்றுவித்து, விடு தலைப் போராட்டத்தைத் தூண்டி விடுதலையும் பெற்றுத் தந்தது. இந்தியர் ஆங்கிலத்தைக் கற்கவுங் கேட்கவுங் கூடாதென்றும், கற்பினுங் கேட்பினும் நாவையறுக்கவும் காய்ச்சிய ஈயத்தைக் காதில் வார்க்கவும் வேண்டுமென்றும் ஆங்கிலர் கோட்பாடு கொண்டிருந்திருப்பின் காந்தியடிகளும் நேருவும் தோன்றியிரார்; இந்தியா விடுதலை பெற்றிருக்காது.

ங்

னி, ஆங்கிலத்தால் மட்டுமன்றி ஆங்கிலராட்சியி னாலும் இந்தியா பெருநன்மை பெற்றது. ஆங்கிலர்

காலம்வரை இந்தியா ஒருகாலும் ஒரே ஆட்சி

ம்

நாடாயிருந்ததில்லை. கரிகால் வளவனும் அசோகனும் போன்ற பேரரசர் காலத்திலும், சிற்றரசு நாடுகள் திறை செலுத்திவந்தனவேயன்றி ஓராட்சிக் குட்படவில்லை. ஆங்கிலர் காலத்தில் 545 உள்நாட்டரசர் இந்தியாவை

யாண்டுவந்தனர். அவரனைவரையும் ஒரு குடைக்கீழ்க் கொண்டு வந்து, இந்தியர் அனைவர்க்கும் பேச்சுரிமையும் எழுத்துரிமையுந் தந்தது ஆங்கில அரசே. அல்லாக்கால் காந்தியடிகளேனும் நேருவேனும் ஓர் உள் நாட்டரசின் அதிகார வெல்லைக்குட் புகுந்து அவரைத் தாக்கிப் பேசிவிட்டு வீடு திரும்பியிருக்க முடியாது. ஆகவே இந்தியா முழுவதையும் ஓராட்சி நாடாக்கி ஓர் அரசியற் கட்சியிடம் ஒப்படைத்தது, மதிக்கமுடியாத பெரு நன்மையாகும்.

இனி, ஆங்கிலர் போன்ற மேலையர் ஆட்சி இங்குத் தோன்றியிராவிடின், தொடர் வண்டிகளிற் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர் (தீண்டாதார்) என்னும் ஐந்து வகுப்புகளேயன்றி, முதலாவது, இரண்டாவது, மூன்றா வது என்னும் வகுப்புகள் தோன்றியிரா. ஆதலால் குமுகாயத் துறையிலும் ஆங்கிலராட்சி மாபெரு நன்மை செய்ததாகும்.

இற்றைக் கல்வியெல்லாம் அறிவியலும் (Science) கம்மியமு (Technology) மாதலால், ஆங்கிலம் அறிவுத்துறையில் இந்தியர்க்கு இன்றியமையாததாகும்.