உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1

முன்னுரை

1. பண்டைத் தமிழக அரசு வரலாறு

பண்டைத் தமிழகம் என்பது, குமரிமுனைக்குத் தெற்கில் 2000 கல் தொலைவுவரை பரவியிருந்து, இந்துமாவாரியில் மூழ்கிப்போன குமரிக்கண்டம் என்னுந் தென்கண்டமாகும்.

"பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி

""

(சிலப். 11:19-22)

"அக்காலத்து அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளியென்னு மாற்றிற்கும் குமரி யென்னு மாற்றிற்குமிடையே எழுநூற்றுக் காவதவாறும், இவற்றின் நீர்மலி வானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்முன்பாலை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்குன்ற நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்குறும்பனைநாடு மென்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்ல முதலிய பன்மலை நாடும் காடும் நதியும் பதியும் தடநீர்க் குமரி வடபெருங் கோட்டின்காறும், கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவமென்றா ரென்றுணர்க (சிலப். 8: 1-2, அடியார். உரை). இக் கடல் கொண்ட நிலம்முழுதும் பழம் பாண்டிநாடு என்பதை அறிதல் வேண்டும்.

இக் கூற்று மொழிநூற் சான்றால் முழு வலியுறுகின்றது. ஆதலால், கடல்கோட்கு எஞ்சியுள்ள இற்றைத் தமிழ்நாட்டிற் கிறித்துவிற்குப் பிற்பட்ட கோவிற் கல்வெட்டுகளில் தொல் பொருட்டுறைச் சான்று காண முயல்வது, வானத்து மீனுக்கு வன்றூண்டிலிட்ட கதையாகவே முடியும். தமிழ்நாட்டு வரலாற்றிற்குத் தொல்பொருளாராய்ச்சித் துறை இம்மியும் பயன்படா தென்பதை அறிதல் வேண்டும்.

குமரிமலைத்தொடர் தென்னாப்பிரிக்காவையடுத்த மட காசுக்கர்த் தீவைச் சார்ந்ததாகத் தெரிவதனாலும், தமிழ் உலக