உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




190

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

10. மாந்தனூல், லங்குநூல், பறவைநூல்,

11.

ஊரி

(reptile) நூல், பூச்சிநூல், மீனூல், பயிர் பயிர்நூல் முதலிய உயிர்நூற் பிரிவுகள் போன்ற பல நூற்பிரிவுகள். உடம்பியல் மாந்தநூல்(Physical Anthropology), குமுகாய மாந்தனூல் (Cultural Anthropology), பண்பாட்டு மாந்தனூல் (Social Anthropology) என்னும் மாந்தநூற் பிரிவுகள் போன்ற ஒரு னூற்பிரிவுகள்.

12. திரைப்படம், ஒலிப்பதிவு, மின்விளக்கு முதலிய உறுமதிப் புதுப்புனைவுகள்.

13. அணுவியல் ஆராய்ச்சி போன்ற நுண்ணாய்வுகள். 14. திங்களை யடைந்தது போன்ற இறும்பூது வினைகள். 15. குணவேறுபாடும் பண்பு வேறுபாடும். குணம் = தன்மை, பண்பு = நற்குணம்.

16. மனப்பான்மை வேறுபாடு.

சிலர்க்குச் செல்வஞ் சேர்க்கும்

மனப்பான்மை;

சிலர்க்கு அறிவை வளர்க்கும் மனப்பான்மை

"இருவே றுலகத் தியற்கை திருவேறு

தெள்ளிய ராதலும் வேறு.

(குறள்.384)

17.

சிலர்க்குத் தொண்டு செய்யும் மனப்பான்மை; சிலர்க்கு அதிகாரஞ் செலுத்தும் மனப்பான்மை.

இங்ஙனமே பிறவும். சுவை வேறுபாடும் பொருள்கள் மேல் விருப்பு வெறுப்பு வேறுபாடும் மனப்பான்மை வேறுபாட்டின் பாற்பட்டனவே.

ஊதை (வாத) பித்தங் கோழை என்னும் முந்நாடி மிகை வேறுபாடு.

சூட்டுடம்பும் குளிர்ச்சியுடம்பும் போன்று, முந்நாடி மிகையும் சிற்சில பணிகட்குத் தூண்டும் அல்லது ஏற்றன வாயிருக்கும்.

18. தேவிகம் (சாத்துவிகம்), மாந்திகம் (இராசதம்), பேயிகம் (தாமதம்) என்னும் மும்மூலக் குணங்களின் ஏற்றத் தாழ்வு.

நல்லாசிரியர், சமய குரவர், உண்மைத் துறவியர் முதலி யவர்க்குத் தேவிகமும், ஊக்கமாகச் செய்யும் ஆக்க