உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




198

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

"நூலெனிலோ கோல்சாயும் நுந்தமரேல் வெஞ்சமராம் கோலெனிலோ ஆங்கே குடிசாயும்

-

நாலாவான்

மந்திரியு மாவான் வழிக்குத் துணையாவான்

அந்த அரசே அரசு

""

என்று ஓர் ஔவையார் விடையிறுத்திருக்கின்றார்.

சட்டத் துறை (Legislature), நிறைவேற்றத் துறை (Executive), தீர்ப்புத்துறை (Judiciary) என்னும் மூன்றனுள் தலைமை யானது சட்டத்துறை. நிறைவேற்றத்துறை ஆள்வினைப் பக்கம் படைத்துறைப் பக்கம் என இரு பக்கங்களைக் கொண்டது. ஆள்வினைக்குத் துணையாகவும் கருவியாகவுமிருப்பது படைத் துறை. ஆகவே, படைத்தலைவன் ஆள்வினைத் தலைவனாதல் கூடாது. ஒருகால் ஆயின், அடுத்தடுத்துப் போர் செய்வான்; அல்லது அழிப்பான். அதை இன்றும் கண்ணாரக் காண் கின்றோம். இதற்கு எகிபதியக் குடியரசுத் தலைவர் போன்ற ஒரு சிலரே விலக்கு.

படைத்துறை யாட்சியால் ஒரு நாட்டிற் படுகொலைகள் நேரும்போது, அதைத் தடுக்கும் ஆற்றலின்றி, ஒரு நாட்டின் அகவியற் செய்தியில் (Internal affairs) தலையிடக்கூடா தென்பது, ஒருவன் தன் மனைவியையோ மக்களையோ கொல்லும்போது, அது அவன் சொந்தவுரிமை யென்று சொல்வ தொத்ததே.

கொடுங்கோலாட்சியை விலக்காமையுங் குற்றமே.

11. வல்லரசர் வருவாயிற் பெரும்பகுதியை அழிப்பு வினைக்கே பயன்படுத்தி வருதல்.

உலகிற் கால்வாசிப் பேர் குடிக்கக் கூழிற்கும், கட்டக் கந்தைக்கும், குடியிருக்கக் குடிசைக்கும் வழியற்றிருக்கும் போது, இலக்கவரைக் கொல்லியும் நாடழிப்பானுமாகிய அணுக் குண்டுகளையும் கண்டந்துருவிகளையும் (I.C.B.M.) கோடிக் கணக்காகச் செலவிட்டுக் குன்றுபோற் குவித்துக் கொண்டே, உலகமைதி யொப்பந்தங்களையும் செய்து வருதல், “அமைதி வேண்டுமெனில் அமருக்கு அணிய மாயிரு." (“If you want peace, be prepared for war.") என்னும் பழைய நெறிமுறையையே கடைப் பிடிப்ப தாகின்றது.

ஒருகால், மக்கட் பெருக்கத்தைக் குறைக்க இது குறுக்கு வழிபோலும்! இவ்வழியால் எல்லாரும் மாளின் என்ன பயன்?