உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வள்ளுவர் கூட்டுடைமை

49

பொருட்சுவைகளை நுகரும் உணர்ச்சியின்றி, விலங்குகள்போல் வாயினாலுண்ணும் உணவின் அறுசுவை மட்டும் நுகரும் உணர்ச்சி உடைய மாந்தற் போலிகள், இருந்தாலென்ன? இறந்தாலென்ன? ஒன்றும் வேறுபாடில்லை.

செவியுணவைப் போற்றாதவன் மாந்தனல்லன் எனின், அவன் ஒருகாலும் தமிழனாகான்; மக்கட்டொகை மிக்க காலத்தில் தமிழகத்தில் வாழவும் தகான்.

தமிழ்நாடு கூட்டுடைமை நாடாயின், தமிழைப் போற்று வது தமிழனின் தலையாய கடன். அதற்கேற்றவாறு, கூட்டு டைமைக் கட்சித் தலைவர் தமிழ்ப் புலவரல்லராயினும் தமிழ்ப் பற்றாளராகவாவது இருத்தல் வேண்டும்.

7. மக்கட்பெருக்கம்

கூட்டுடைமைக்குப் பெருந்தடையாயிருப்பது மட்டிற்கு மிஞ்சிய மக்கட்பெருக்கம்.

நம் கண்ணெதிரிலேயே, தனிப்பட்ட ஓர் ஆடவனும் ஒரு பெண்டுங் கூடிச் சிறுகுடும்பந் தோன்றுவதையும், சிறுகுடும்பம் பெருங் குடும்பமாகவும் பெருங்குடும்பம் கூட்டுக்குடும்பமாகவும் கூட்டுக் குடும்பம் ஒரு குலக் கிளையாகவும் பெருகுவதையும், நம் காலத்திலேயே, ஒருசில வீடுகள் சேர்ந்து சிற்றூர் தோன்று வதையும், சிற்றூர் பேரூராகவும், பேரூர் நகராகவும், நகர் மாநகர் அல்லது நகரமாகவும், நகரம் மாநகரமாகவும் விரிவடை வதையும் காண்கிறோம்.

ஏறத்தாழ

நாலாயிரம் ஆண்டுகட்கு முன்னிருந்த ஆபிரகாமின் வழிமரபினர், இன்று கோடிக்கணக்கான அரபிய ராயும், இலக்கக்கணக்கான யூதராயும் மேலைநாடுகளிற் பரவி யுள்ளனர்.

ஓர் ஊர் மக்கட்டொகையும், நாட்டு மக்கட்டொகையும் உலக மக்கட்டொகையும், வரலாற்று முறைப்படி நோக்கின், வரவர மிகுந்தும் பின்னிற்குச் செல்லச் செல்லக் குறைந்தும் தோன்றுகின்றன. இதினின்று, மன்பதை முழுதும் ஒரேயிணைப் பெற்றோரினின்று தோன்றியிருக்க வேண்டுமென்று தெரி கின்றது.

இற்றை அறிவியலும் கம்மியமும் மருத்துவமும் தோன்றாத பண்டைக் காலத்தில், போரும் கொள்ளைநோயும் தீக்கோளும் வெள்ளமும் கடல்கோளும் எரிமலையும் நிலநடுக்கமும், அடிக்கடி கணக்கற்ற மக்களை மாய்த்து வந்தன.