உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




58

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

ங்

இந்திய மக்கட்பெருக்கத்தால் ஏற்படவிருக்கும் பெருங் கேட்டையும் அதைத் தடுக்கும் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தையும் பற்றி, அடிக்கடி வற்புறுத்திக் கூறிவந்த ஒரே பழைய நடுவண் மந்திரியார் பர். எசு.சந்திரசேகர் இன்று அமெரிக்காவிலுள்ளார்.

ஞாலம் முழுதும் 300 கோடி மக்களையும், இந்தியா 30 கோடி மக்களையும்தான் தாங்கும். இந் நூற்றாண்டிறுதியில், உலக மக்கட்டொகை 600 கோடியும் இந்திய மக்கட்டொகை 100 கோடியும் தாண்டிவிடுமென்று சொல்லப்படுகின்றது. இதை உடனடியாய்த் தடுக்காவிடின், இன்னும் ஒரு நூற்றாண்டிற்குள் இந்திய மக்கட்டொகையே 600 கோடி ஆயினும் ஆகும். மேலும் நூற்றாண்டாயின், ஞாலத்தில் மக்கட்கு நிற்கவும் மில்லாது போம்.

ஒரு

பலர், மக்கட்டொகை எத்துணை மிகினும் இன்றுள்ள நிலைமையே என்றும் நிலவுமென்றும், உண்டாக்கத்தை மட்டும் பெருக்குதல் வேண்டுமென்றும், பற்றாக்குறைக்குப் பல நாடு களினின்று கடன் கொள்ளலாமென்றும், எளிதாகக் கூறுவர். அவர் அறியார். இன்றுள்ள நிலைமை நீடிக்காது. திடுமென்று அழிவு தோன்றும். அன்று நிலவளங் குன்றும். வேண்டிய அளவு விளைவிக்க இயலாது. வளம்படுத்த வுரமுங் கிடையாதுபோம். விளைவிப்பவர் விளைந்ததைத் தமக்கே வேண்டுமென்று வைத்துக் கொள்வர். விற்பனைக்கு ஒன்றும் வெளிவராது. பிற நாடுகளும் தம் விளைப்புத் தமக்கே போதுமென்று பிறநாடு கட்குக் கடன் கொடா. அத் துன்பம் வருமுன் காவாவிடினும் வரும்போதேனுங் காத்தல் வேண்டும். வந்தபின் காத்தல், வெள்ளம் வந்தபின் அணை கட்டுவதும், குதிரை களவு போனபின் கொட்டகையைப் பூட்டுவதும், நோயாளியிறந்த பின் மருத்துவஞ் செய்வதும் ஆகும்.

ஆதலால், பின்வருமாறு பல கடுமையான தடுப்பு வழிகளைக் கண்டிப்பாகக் கையாண்டு, இற்றை மக்கட் பெருக்க வேகத்தைப் பெரிதுங் குறைப்பதுமன்றி, இற்றை மக்கட் டொகையையே படிப்படியாக மெள்ள மெள்ள அரையளவாக ஒடுக்குதலும் வேண்டும். அவ் வழிகளாவன:

1. மணவாமை போற்றல்

அரசு கன்னித்துறவியராகவும்(confirmed bachelors) தனி வாழ்க்கையராகவும்(celibates) வாழப் பூட்கை கொண்டவரைப் பாராட்டுதல் வேண்டும்.