உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூல்

119

வடவர் சுவணம் என்பதை ஸுபர்ண என்று திரித்தும், ஸு + பர்ண என்று பிரித்தும், அழகிய இலை, அழகிய இலை போன்ற சிறகுகளை யுடை யது, பெரும் பறவை, கலுழன் (கருடன்) என்று பொருள் விரித்தும், தம் ஏமாற்றுத்திறத்தின் எல்லையைக் காட்டியுள்ளனர். ஸு = நல்ல, பர்ண = இலை.

மானியர் வில்லியம்சு சமற்கிருத ஆங்கில அகரமுதலியும் இவ் வாறே மூலங் கூறுகின்றது.

வ வை

வடம்-வடவை = வடக்கில் தோன்றும் நெருப்பு அல்லது ஒளி (Aurora Borealis). இது வடந்தை எனவும் படும். வடம்- வடந்தை. தாயுமானவரும் இதை வடவனல் என்பர். உத்தர மடங்கல் (திவா). உத்தரம் (பிங்.) என்றும் இதற் குப் பெயருண்டு. உத்தரம் வடக்கு. ஆராரோ போரியாலிசு என்னும் இலத்தீன ஆங்கிலச் சொல்லும் வடவொளி (northern lights) என்னும் பொருளதே. (Ch. T.C. D.).

16ஆம் நூற்றாண்டு ஆங்கிலக் கலவர் போன்றே, வரலாற்றிற் கெட்டாத பண்டைத் தமிழக் கலவரும் (sailors) சுற்றுக் கடலோடிகளா(circumnavi- gators) இருந்தமையால், வடமுனையில் தோன்றும் பல்வண்ண மின்னொளி யைக் கண்டு அதற்கு வடவை எனப் பெயரிட்டிருக்கலாம்.

வடவர், வடவை என்னுஞ் சொல்லை வடசொல்லாகக் காட்டல் வேண்டி, வடபா என்னும் அதன் வடமொழி வடிவிற்குப் பெண்குதிரை என்று பொருளிருத்தலால், அதற்கேற்ப ஒரு கதையைக் கட்டி, வடபாக்னி என்றும் வடபா முகாக்னியென்றும் பெயர்விரித்து, பெண்குதிரை முகத்தில் தோன்றிய நெருப் பென்று பொருளுங் கூறிவிட்டனர்.

மா. வி. யின் ச - ஆ. அகரமுதலி அக் கதையையும் வரைந்து, வடபாக்னி என்னுஞ் சொற்கு "mare's fire sumbarine fire or the fire of the lower. regions (fabled to emerge from a cavity called the 'mare's mouth' under the sea at the South Pole” என்று விளக்கமுங் கூறியுள்ளமை காண்க.

இன்னும் இவற்றின் விரிவை என் ‘வடமொழி வரலாறு' என்னும் நூலுட் கண்டுகொள்க.

4. தமிழுக்கென்று தண்டப்பெற்ற பணம் முழுதும் தமிழுக்காகச் செல விடப் பெறாமை.