உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூல்

25

12. ஆரியர் வெள்ளையர்; தமிழரும் திரவிடரும், கரியரும் செ-யரும் பொன்னருமாவர்.

முந்தியல் மாந்தர் வெள்ளையரல்லர். ஆதலால் வெள்ளையர் மொழி உலக முதன்மொழியா யிருத்தல் முடியாது.

மாந்தன் பிரிபு நடுவம்

(Centre of Diffusion of Man)

மாந்தவினம் குமரிக்கண்டத்தினின்றே ஞாலத்தின் பல்வேறிடங்கட் கும் பிரிந்துபோயிருத்தல் வேண்டும்.

சான்றுகள்

1. இற்றையுலகில் முந்தியல் மாந்தராயுள்ள ஆத்திரேலியரும் தென் னாப்பிரிக்கரும் குமரிக்கண்டத்தைச் சேர்ந்தவரே. தென்னமெரிக் கரும் குமரிக் கண்டத்தினின்றே சென்றிருத்தல் வேண்டும். குமரிக்கண்டம் நண்ணிலக்கோட்டைச் சார்ந்த ஞாலநடுவிடம்.

2.

3.

4.

தமிழ் சொல்வளர்ச்சியின் ஐவேறு நிலைகளைக் காட்டி நிற்றலால், அசைநிலைக் காலத்தில் சீனரும் மங்கோலியரும், கொளுவு நிலைக் காலத்தில் ஊரல். ஆல்தேக்க மொழியினரும், பகுசொன் னிலைக் காலத்தில் மேலையாரியரும் பிரித்து போயிருக்கலா மென்று கொள்ளப் போதிய இடமுண்டு. ஆத்திரேலியரும் ஆப்பிரிக்கரும் மொழித் தொடக்கநிலையில் தாம் இருந்த இடத்திலேயே தங்கிவிட்டனர். திரவிடர் நேர்வடக்கே தொடர்ந்து சென்று செந்தமிழைக் கொடுந் தமிழாகவும் கொச்சைத் தமிழாகவும் சிதைத்துக் கொண்டவர்.

பண்டை யெகிபதிய வரலாற்றை ஆரா-ந்த வில்லியர் தூவர்ட்டு (Villiers Stuart) என்பவர், ஐரோப்பியரின் முன்னோருட் பெரும் பாலார் ஆசியாவினின்று பாபெல் மந்தெபு (Babel Mandeb) என் னும் நீரிணைப்பு (straits) வழியாக ஆப்பிரிக்கக் கரையேறி எத்தி யோப்பியாவில் சில காலந் தங்கியபின், எகிபது நாட்டு நீலாற்றுவெளி நிலத்திற்குப் பரவின ரென்றும், பின்பு அங்கிருந்து நண்ணிலக் கடல்கடந்து ஐரோப்பாவிற் குடியேறி ஆரியராக மாறினரென்றும் எகிபதியக் குறுநிலமன்னரல்லாரையும் முதன்முதலாக ஒன்றாக இணைத்து ஓரரசாட்சி நிறுவிய மெனெசு (Menes) வேந்தனும்