உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

வண்ணனை மொழிநூலின் வழுவியல்

பல்காற் பழகினுந் தெரியா வுளவேல்

தொல்காப் பியம்திரு வள்ளுவர் கோவையார்

மூன்றினும் முழங்கும் ஆண்டினும் இலையேல்

வடமொழி வெளிபெற வழங்கும் என்க

இ.கொ.7)

என்று தலைகால் தெரியாமல் தாண்டவமாடித் தாறுமாறாக உளறிக் குவித்திருப் பது, மொழியாரா-ச்சியும் தனித்தமிழ் வளர்ச்சியும் மிக்க இக்காலத்திற்கு இம்மியும் ஏலா.

இந் நூற்பாக் கூற்றுக்கட்கு மறுப்பு

தொல்காப்பியத்திலும் திருக்குறளிலும் வடமொழி முறைமை வர வில்லை. இது தேசிகரின் திரிபுணர்ச்சியே.

இலக்கணம், இலக்கியம், ஏது, உத்தி, அகரம், மகரம், மாத்திரை, உவமை, உருவகம், காலம், அதிகாரம், குணம், குணி என்பன தமிழ்ச் சொற்களே. கரம் காரம் என்பன தமிழ் எழுத்துச் சாரியைகள். குறிற்குக் கரம், நெடிற்குக் காரம். அவற்றை வடமொழியாளர் கடன்கொண்டனர். அகாரம் மகாரம் என்பன செ-யுளில் இசைநிறைக்க வருமாயின் செ-யுள் திரிபாம்; அன்றேல் வழு வாம். வடமொழியில் இந் நெறியைத் தழுவுவதில்லை. வியாகரணம் சாகித் தியம் என்பனவே வடமொழியில் இலக்கண விலக்கியத்தைக் குறிக்குஞ் சொற்கள்.

வடசொல் தென்சொல்

தென்சொல்

வடசொல்

நியாயம்

நிமித்தம்

முறை, முறைமை பொருட்டு

விகற்பம்

வேறுபாடு

சந்தி

புணர்ச்சி

சாத்திரம்

நூல், அறிவியல்

விதி

நெறி,நெறியீடு

சூத்திரம்

நூற்பா

அலங்காரம்

அணி

தந்திரம்

புலம், நூல்

இலேசம்

மறைப்பு, துக்குணி

பகுதி

முதனிலை

காரகம்

விகுதி

இறுதிநிலை, ஈறு

ஞாபகம்

வினைமுடிபு

நினைவு, நினைப்பு

பதம்

கிளவி, சொல்

விசேடணம்

அடை, அடைமொழி

பதார்த்தம்

சொற்பொருள்

விசேடியம்

அடைகொளி

ஆதி

தொடக்கம், முதல்

விகாரம்

திரிபு

அந்தம்

7

முடிவு, இறுதி, ஈறு

அநுவாதம்

வழிமொழிவு

உதாரணம்

காட்டு, எடுத்துக்காட்டு