உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இளைஞர் பக்கம்

ஆடுவார் தொகை : இதை இருவர் ஆடுவர்.

91

ஆடு கருவி : நிலத்திற் சமமான இருபடுக்கை வரிசையாகக் ஆடுகருவி கில்லப்பட்ட 10 அல்லது 14 அல்லது 16 குழிகளும், அவற்றுள் அவ்வைந்தாய் இடுவதற்கு வேண்டிய கழற்சிக்காய் (கச்சக்காய்) அல்லது புளியங்கொட்டை அல்லது கூழாங்கற்களும், இதற்கு வேண்டுங் கருவிகளாம்.

சிலர், என்றும் எங்கும் வசதியாய் ஆடுதற்பொருட்டு, வேண்டிய அளவு பள்ளஞ் செதுக்கப்பெற்ற மரக்கட்டைகளை வைத்திருப்பர்.

ஆடிடம் : இது வீட்டுள்ளும் வீட்டு அல்லது மரநிழலிலும் ஆடப்பெறும். இது ஏனை வகைகட்கும் ஒக்கும்.

ஆடுமுறை : குழி வரிசைக்கொருவராக இருவர் வரிசை யடுத்து எதிரெதிர் உட்கார்ந்து, குழிக்கைந்தாக எல்லாக் குழிகளிலும் கற்களைப் போடுவர். முந்தியாடுபவர், தம் வரிசையில் ஏதேனுமொரு குழியிலுள்ள கற்களைந்தையும் எடுத்து, வலப்புறமாகச் சுற்றிக் குழிக்கொன்றாகப் போட்டுக்கொண்டே போதல் வேண்டும். கற்களைப் போட்டு முடிந்தபின், கடைசிக்கல் போட்ட குழிக்கு அடுத்த குழியிலுள்ள கற்களைந்தையும் எடுத்து, அதற்கப்பாலுள்ள குழியில் ஒவ்வொன்றாகப் போட்டுக் கொண்டு போதல்வேண்டும். இங்ஙனம் போடும்போது, தம் வரிசையில் இடவலமாகவும், எதிரி வரிசையில் வல இடமாகவும் போட்டுச் செல்லவேண்டும். கடைசியாகப் போட்ட குழிக்கு அடுத்த குழி, வெறுமையாக இருந்தால் அதற்கடுத்த குழியிலுள்ள கற்களனைத்தையும் எடுத்துத் தம்மிடம் வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பின், எதிரியார் தம் வரிசையிலுள்ள ஒரு குழியிலிருந்து தொடங்கி, முன் சொன்னவாறே ஆடுவர். கடைசியாகப் போட்ட குழிக்கு அடுத்த இரு குழியிலும் கல் இல்லாவிடின், ஆடுபவர் ஒன்றும் எடுக்காமலே நின்றுவிட வேண்டும். ஒவ்வொருவரும் தத்தம் வரிசையிலுள்ள குழியொன்றில் 4 கற்கள் சேர்ந்துவிடின், அவற்றைப் பசு என்று சொல்லி எடுத்துக்கொள்வர். சிலவிடங்களில், 8 கல் சேர்ந்துவிடின் அவற்றைப் பழம் என்று சொல்லி எடுத்துக்கொள்வர்.